தலைஞாயிறு - 1
| தலைஞாயிறு - 1 TNR 1 |
|---|
| வேளாண் பெயர் |
| திருத்துறைப்பூண்டி கார் |
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| நல் விதைத் தேர்வு (திருத்துறைப்பூண்டி கார்) |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 140 - 145 நாட்கள் |
| வெளியீடு |
| 1964 |
| வெளியீட்டு நிறுவனம் |
| TNAU, ஆழ்நீர் ஆராய்ச்சி நிலையம் தலைஞாயிறு |
| மாநிலம் |
| தமிழ் நாடு |
| நாடு |
தலைஞாயிறு - 1 (TNR 1), பரம்பரைப் பெயர்; திருத்துறைப்பூண்டி கார் (Thiruthuraipoondikar[1]) எனப்படும் இந்த நெல் வகை, நல்விதைத் தேர்வு முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும். [2]
வெளியீடு
[தொகு]தென்னிந்தியாவின் தமிழக நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டத்தில் காவிரி கடைமடை பகுதியில் உள்ள, தலைஞாயிறு "ஆழ்நீர் ஆராய்ச்சி நிலையம்" 1964 ஆம் ஆண்டு, இந்நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]
பின்னணி
[தொகு]நீண்ட கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 140 - 145 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது.நீர்ப்பாசனம் செய்யப்படும் தாழ்வான நிலம், மற்றும் ஆழமான நீர் நிலைக்கு ஏற்ற இது, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் நீண்ட தடித்த சிவப்பு "ஆழநீர் நெற்பயிர்" அல்லது "ஆழ நீர் நெல் சாகுபடி" என பொதுவாக கூறப்படும் இந்நெல் இரக்கத்தின் அரிசி, நீண்ட மற்றும் தடித்த சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது.[2]
சான்றுகள்
[தொகு]- ↑ THE INTERNATIONAL RICE RESEARCH INSTITUTE - RESPONSE TO DEEP WATER STRESS Page:315
- ↑ 2.0 2.1 2.2 "Rice Knowledge Management Portal - TNR 1". web.archive.org (ஆங்கிலம்) - by rkmp.tn on Tue, 2011-07-19 12:46. Retrieved 2025-09-30.