தலைகீழ் விகித விதி
தலைகீழ் விகித விதி (Law of reciprocal proportions) என்பது சமான விகித விதி அல்லது நிலையான விகித விதி[1] எனவும் அழைக்கப்படுகிறது.[2] இது வேதிக்கூடுகை தொடர்பான அடிப்படை விகிதவியல் விதிகளுள் ஒன்றாகும். வெவ்வேறு தனிமங்கள் ஈடுபடும் ஒரு வேதிவினையில் எந்த விகிதத்தில் தனிமங்கள் கூடுகின்றன என்பதைத் தொடர்புபடுத்துகிறது. இந்த விதியானது செர்மியாசு ரிச்டர் என்பவரால் 1971 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இந்த விதியின் எளிய வடிவமானது பின்வருமாறு:[3]
- ஒரு தனிமம் A யானது தனிமம் B மற்றும் தனிமம் C உடன் வினைபுரிவதாகக் கொள்வோம். தனிமம் B மற்றும் C ஆகியவை தங்களுக்குள் இணைவதாகவும் கொள்வோம். தனிமங்கள் B மற்றும் C ஆகியவை தங்களுக்குள் இணையக்கூடிய எடை விகிதமானது, A என்ற தனிமத்துடன் தனித்தனியாக B மற்றும் C ஆகியவை இணையக்கூடிய விகிதத்துடன் எளிய தொடர்பில் உள்ளன.
- உதாரணமாக, 1 கிராம் சாடியம் (Na = A) 1.54 கிராம் குளோரின் (Cl = B) அல்லது 5.52 கிராம் அயோடின் (I = C) ஆகியவற்றுடன் தனித்தனியாக வினைபுரிவதாகக் கொள்வோம். (இந்த விகிதங்கள் நவீன மூலக்கூறு வாயப்பாடுகளான NaCl மற்றும் NaI ஆகியவற்றோடு தொடர்புடையவை). குளோரின் மற்றும் அயோடின் ஆகியவற்றின் விகிதமானது 5.52/1.54 = 3.58 ஆகும். இதே போன்று 1 கிராம் குளோரின் 1.19 கி அயோடினுடன் வினைபுரிகிறது. 1.19 என்ற இந்த விகிதமானது இந்த விதிக்கு உட்பட்டே அமைகிறது. அதாவது 3.58 இன் 1/3 பங்கு என்ற எளிய விகிதமாக இது உள்ளது. (இந்த விகிதமானது அயோடின் முக்குளோரைடு சேர்மத்தின் ICl3 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டோடு தொடர்புைடயது) இதே போன்று ஐதரசன், கார்பன் மற்றும் ஆக்சிசன் போன்ற தனிமங்கள் தலைகீழ் விகித விதிக்கு உட்படுகின்றன.
இந்த விதியை ஒப்புக்கொண்டமை தனிமங்களின் அட்டவணையில் சமான நிறைக்கான ஒரு கலம் ஒதுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியது. 19 ஆம் நுாற்றாண்டில் சமான நிறைகள் வேதியியலாளர்களால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன.
வேதிக்கூடுகை தொடர்பான மற்ற விதிகளாக, அறுதி விகிதசம விதி மற்றும் மடங்கு விகித விதி ஆகியவை உள்ளன. அறுதி விகிதசம விதியானது தனிமங்கள் A மற்றும் B கூடி எந்த ஒரு சேர்மம் உருவானாலும், அந்தச் சேர்மங்களில் தனிமங்கள் A மற்றும் B இவற்றுக்கிடையேயான குறிப்பிட்ட நிலையான விகிதத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது. மடங்கு விகித விதியானது தனிமங்கள் A மற்றும் B கூடி உருவான வெவ்வேறு சேர்மங்களுக்கிடையே உள்ள விகிதவியல் தொடர்பை விவரிக்கிறது.
வரலாறு
[தொகு]தலைகீழ் விகித விதியானது, அமிலங்களை உலோகங்கள் நடுநிைலப்படுத்தும் வினைகளில் உலோகங்கள் மற்றும் அமிலங்களுக்கிடையேயான விகிதம் தொடர்பான ஆய்வுகளின் அடிப்படையில் ரிச்டரால் உருவாக்கப்பட்டது. 19 ஆம் நுாற்றாண்டில் இந்த விதியானது பெர்சீலியசால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு இந்த விதியைப் பின்வருமாறு கூறினார்:[1]
- இரண்டு தனிமங்கள் அல்லது சேர்மங்கள் A மற்றும் B ஆகியவை C மற்றும் D ஆகியவற்றின் மீதான ஒரு நாட்டத்தைக் கொண்டிருந்தால் A உடன் இணையும் C மற்றும் D இவற்றின் அளவுகளின் விகிதங்கள் B உடன் இணையும் C மற்றும் D இவற்றின் அளவுகளின் விகிதங்களுக்கு சமமானதாக இருக்கும்.
பின்னர் ஜீன் இசுடாசு சோதனைகளுக்கான பிழை வரம்பிற்குள் விகிதவியல் விதிகள் சரியானவை என்று கூறினார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Freund, Ida (1920). The experimental basis of chemistry; suggestions for a series of experiments illustrative of the fundamental principles of chemistry (1st ed.). pp. 294–295. பார்க்கப்பட்ட நாள் April 8, 2014.
{{cite book}}
: More than one of|accessdate=
and|access-date=
specified (help) - ↑ Holleman, A. F.; Wiberg, E. (2001), Inorganic Chemistry, San Diego: Academic Press, p. 21, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5
- ↑ Holmyard, E.J. (1931). Inorganic chemistry- a text book for colleges and schools (1st ed.). pp. 16–17. பார்க்கப்பட்ட நாள் 8-04-2014.
{{cite book}}
: Check date values in:|access-date=
(help); More than one of|accessdate=
and|access-date=
specified (help)