தலைகீழ் வகுப்பறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலைகீழ் வகுப்பறை அல்லது மறுபுறம் திருப்பப்பட்ட வகுப்பறை (Flipped classroom) என்பது ஒரு மாற்று கற்பித்தல் முறையாகும். இது பாரம்பரிய கற்றல் சூழலை மாற்றி, பெரும்பாலும் வகுப்பறைக்கு வெளியே, யூடியூப் போன்ற ஆன்லைன் ஊடகத்தில் உள்ளடக்கத்தை வழங்கி மாணவர்களை வேகத்துக்கு ஏற்ப வீட்டிலிருந்தே பார்த்து கற்று வகுப்பறையில் விவாதித்து புரிந்துகொள்ளும் ஒரு கற்றல் முறை ஆகும். மாணவர்களுக்கு அறிவியல், கணிதம் போன்ற பாடங்களை 5 முதல் 10 நிமிடங்கள் கொண்ட சிறுசிறு காணொளிகளாக்கு யூ டியூபில் பதிவேற்றம் செய்வர். அதை மாணவர்கள் வீட்டில் அமர்ந்து ஓய்வான நேரத்தில் பார்க்கவேண்டும். இதனால் அவரவர் கற்கும் வேகத்துக்கு ஏற்ப நிறுத்தி நிறுத்தி பார்க்க இயலும். அடுத்து வரும் நாட்களில் தொடர்ந்து வகுப்பறையில் ஆசிரியரின் வழிகாட்டுதல்கலோடு தகவல்கள்மீது உரையாடல்களில் ஈடுபடுவர்.

ஆசிரியர்கள் வழிகாட்டலில் நடக்கும் உரையாடலில் மாணவர்களின் கேள்விகளுக்கு ஆசிரியர் நேரடியாக விடைகொடுத்து அதன்வழியாக கற்பிக்கப்படுகிறது. ஆனால் பாரம்பரிய நடைமுறையிலான வகுப்பறைகளில், குறிப்பிட்ட பாடங்கள் சொற்பொழிவு பாணியில் ஆசிரியரால் விளக்குவதில் கவனம் செலுத்தப்படுகிறது. வகுப்பு விவாதங்கள் வழக்கமாக ஆசிரியரை மையமாகக் கொண்டவையாகவும், உரையாடலின் ஓட்டமானது ஆசிரியரால் கட்டுப்படுத்தப்படும் வகையில் இருக்கும்.[1] தலைகீழ் வகுப்பறையைப் பொறுத்தவரை, மாணவர்கள் படிக்கவேண்டிய பாடங்களை மாணவர்கள் பள்ளிக்கு வெளியே ஈடுபாட்டுடன் படிக்கும் விதத்தில் ஊக்குவிக்கப்படுகின்றனர்.[2]

தலைகீழ் வகுப்பறையைக் கண்டுபிடித்தவர்கள் அமெரிக்க பள்ளி ஆசிரியர்களான ஜோனதன் பெர்க்மேன், ஆரன் சாம்ஸ் ஆகியோராவர். விரைவாக பாடம் நடத்தும் ஆசிரியரின் வேகத்தோடு முடியாமல் தடுமாறும் மாணவர்களுக்கும், கலை மற்றும் விளையாட்டு போன்ற துறைகளில் ஈடுபட்டு அதனால் வகுப்புக்கு அடிக்கடி வர முடியாமல் போகும் மாணவர்களுக்கும் என்ன செய்யலாம் என யோசித்து உருவாக்கிய ஒரு வகுப்பறை முறை இது ஆகும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ryback, D., & Sanders, J. (1980).
  2. The flip: Turning a classroom upside down, Washington Post, 4.
  3. ச. மாடசாமி (2017 செப்டம்பர் 5). "தேவை, தலைகீழ் வகுப்பறை!". கட்டுரை. தி இந்து. 8 செப்டம்பர் 2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலைகீழ்_வகுப்பறை&oldid=2441289" இருந்து மீள்விக்கப்பட்டது