தலேல் சிங் (அரசன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தலேல் சிங்
மகாராஜா
கரன்புராவின் மகாராஜா
ஆட்சிக்காலம்1677-1724 பொ.ச
முன்னையவர்இரண்டாம் இராம் சிங்
பின்னையவர்பிஷன் சிங்
பிறப்புசிசாய், தந்த்வா
இறப்பு1724 பொ.ச
பதாம்
மரபுஇராம்கர் இராச்சியம்
தந்தைஇராம் சிங்
மதம்இந்து சமயம்

தலேல் சிங் ( Dalel Singh )17ஆம் நூற்றாண்டில் கரன்புராவின் மன்னராவார். இவர் தனது தலைநகரை இப்போது சத்ரா மாவட்டத்தில் உள்ள தந்த்வாவில் உள்ள சிசாயிலிருந்து 1685இல் ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள பதாம் நகருக்கு மாற்றினார்.

முகலாயப் பேரரசின் பாதுகாப்பிற்காக ஒரு பெரிய அரண்மனையை கட்டினார். சிவ் சாகர் என்ற தனது புத்தகத்தின்படி, முகலாய படையெடுப்பிலிருந்து பாதுகாப்பதற்காக இவர் தனது தலைநகரை சிசாயிலிருந்து பதாமுக்கு மாற்றினார். [1] இவர் ஓர் கவிஞராக நாக்புரி மொழியில் கவிதைகளை எழுதினார். [2]

பலாமூவின் மன்னர் ஜெய்கிஷன் ராய் மற்றும் தலேல் சிங் ஆகியோர் ஒரு போருக்குப் பிறகு நாகவன்சிகள் வைத்திருந்த டோரியைக் கைப்பற்றினர். இரஞ்சித் ராய்க்கு தலேல் சிங் தங்குமிடம் கொடுத்ததால் ஜெய்கிஷன் ராய் இராம்கரைத் தாக்கினார். தலேல் சிங் போரில் இறந்தார். பின்னர் தலேல் சிங்கின் வழித்தோன்றல்கள் பலாமூவை ஆக்கிரமித்து கைப்பற்றியது. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "राजा-महाराजा की यादों के संग पिकनिक मनाना हो तो बड़कागांव व बादम आइए". prabhatkhabar. 31 December 2018. 6 January 2020 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Giant new chapter for Nagpuri poetry". telegraphindia. 5 November 2012.
  3. Jharkhand Encyclopedia Hulgulanon Ki Partidhwaniyan-1. https://books.google.com/books?id=iYXy1XXNCKoC&dq=%E0%A4%A8%E0%A4%BE%E0%A4%97%E0%A4%B5%E0%A4%82%E0%A4%B6%E0%A4%BE%E0%A4%B5%E0%A4%B2%E0%A5%80&lpg=PA33&pg=PA33#v=onepage&q&f=false. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலேல்_சிங்_(அரசன்)&oldid=3129921" இருந்து மீள்விக்கப்பட்டது