தலேர் மெகந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தலேர் மெகந்தி
எசுப்பானியாவின் மத்ரித்தில் தலேர் மெகந்தியின் நிகழ்ச்சி
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்தலேர் சிங்
பிறப்பு18 ஆகத்து 1967 (1967-08-18) (அகவை 56)
பட்னா, பீகார், இந்தியா
பிறப்பிடம்புது தில்லி, இந்தியா
இசை வடிவங்கள்
தொழில்(கள்)பாடகர், பாடலாசிரியர், இசைத்தட்டு வெளியீட்டாளர்
இசைத்துறையில்1995–நடப்பில்
வெளியீட்டு நிறுவனங்கள்
  • டி ரிகார்ட்சு
இணைந்த செயற்பாடுகள்மிகா சிங், அன்சு ராஜ் அன்சு
இணையதளம்www.dalermehndi.com

தலேர் சிங் (Daler Singh) பரவலாக மேடைப் பெயர், "தலேர் மெகந்தி" (பிறப்பு 18 ஆகத்து 1967) இந்திய இசைப்பதிவுக் கலைஞர், இசைக்கலைஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், இசைத்தட்டு தயாரிப்பாளர், நிகழ்ச்சியாளர் மற்றும் சூழலியலாளர். உலகெங்கும் பங்கராவை பரப்பியதற்காக அறியப்படுகின்றார். தலேருக்கு முன்பாக பரவியிருந்த இந்தித் திரைப்பட இசைக்கு மாற்றாக திரையிசை இல்லா இசைவகையை பரப்பியதற்கும் புகழ்பெற்றவர். தனித்துவமான குரலுடன் ஆற்றல்மிகு நடனப் பாடல்களால் உணர்ச்சிமிகு பாடல்களை வழங்கும் இந்தியப் பரப்பிசைக் கலைஞராகவும் அறியப்படுகின்றார்.[1] இவரது தலைப்பாகையும் நீண்ட தவழும் உடைகளும் தனி அடையாளங்களாக உள்ளன.[2]

மேற்சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தலேர்_மெகந்தி&oldid=3557416" இருந்து மீள்விக்கப்பட்டது