தலித்தியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தலித்தியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தலித் மக்களின் வரலாறு, அடையாளம், வாழ்வியல், பிரச்சினைகள், மனித உரிமை-பொருளாதார-அரசியல் போராட்டங்கள், இலக்கியம், பண்பாடு போன்ற அம்சங்களை ஆயும் இயல் தலித்தியல் எனலாம். இலங்கையில் தலித்துக்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என குறிப்பிடப்படுவர், எனவே தலித்தியலை தாழ்த்தப்பட்டவர் இயல் என்று இலங்கை வழக்கப்படி குறிப்பிடலாம். "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அட்டவணை சாதிகள் (Schedule Castes) என்றும் குறிப்பிடப் பெற்றுள்ள தீண்டாதோர்க்கும், பழங்குடி மக்களுக்கும் (Schedule Tribes) தலித்துக்கள் என்பது பொதுப் பெயராகும்" என்று அம்போத்கரும் தலித் மனித உரிமை போராட்டம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. எனினும் பொருளாதார நிலையில் பிற்பட்ட பிரிவினரும் (Backward Classes), மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களில் பலரும் தங்களை தலித்துக்கள் என்றோ அல்லது தலித்துக்களுடனோ அடையாளப்படுத்துகின்றனர். மேலும் சர்வதேச மட்டத்தில் ஒடுக்குமுறைகளை அனுபவிக்கும் கறுப்பின, மற்றும் முதற்குடி மக்களையும் தலித்துக்கள் என்று அடையாளப்படுத்தப்படுவதுண்டு.

தலித் பிரச்சினைகள்[தொகு]

(இவை வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு இடங்களில் இருந்தவை, இருக்கின்றவை.)

  • கொத்தடிமை
  • (பொதுக்!) கிணற்றில் நீர் எடுக்க தடை
  • சுடுகாட்டில் தம் பிணம் எரிக்கத் தடை
  • குளங்களில் குளிக்க தடை
  • தெருக்களை பயன்படுத்த தடை
  • மேற்சட்டை, வேட்டி, சால்வை அணிய தடை
  • மீசைவிடத்தடை
  • தாவணி, தங்க ஆபரணங்கள் போடத்தடை
  • செருப்பு அணிய தடை
  • குடுமி, கடுக்கண் போட தடை
  • ரயில் பயணிக்க தடை
  • பேருந்து, ரயில் இருக்க தடை
  • பாடசாலையில் படிக்க தடை
  • கோவில் பயன்படுத்த தடை
  • பொது நிறுவனங்களில் உட்புக தடை
  • மருத்துவ வசதி தடை
  • வேற்று உழைப்பு வழிமுறை தடை

தலித் பாரம்பரிய தொழில்கள்[தொகு]

  • முடி செதுக்கல்
  • விவசாயம்
  • பிணம் தூக்கல்
  • சாலை போடல், சுத்தம் செய்தல்
  • சாக்கடை சுத்தம் செய்தல்
  • பிணம் எரித்தல்
  • மரம் ஏறுதல்
  • துணி துவைத்தல்
  • மாடறுத்தல், செத்தமாடு தூக்கல்
  • பறை அறைதல், மேளம் அடித்தல்
  • தேவியாசி
  • பல்லக்கு தூக்கல்
  • மலம் அள்ளும் தொழில்[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

துணை நூல்கள்[தொகு]

  • சி.என். குமாரசாமி. (2001). அம்பேத்கரும் தலித் மனித உரிமைப் போராட்டமும். சென்னை: தமிழ் புத்தகாலயம்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தலித்தியல்&oldid=3605247" இலிருந்து மீள்விக்கப்பட்டது