தலச்சேரி உணவு முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தலச்சேரி உணவு
Thalassery Falooda.jpg
தலச்சேரி ஃபலூடா
மாற்றுப் பெயர்கள்தலச்சேரி பிரியாணி அல்லது பிரியாணி
பரிமாறப்படும் வெப்பநிலைபிரதான உணவு
தொடங்கிய இடம்இந்தியத் துணைக்கண்டம்
பகுதிகேரளம்
ஆக்கியோன்மலபார் வகை, முகலாயர்களின் தாக்கம்
முக்கிய சேர்பொருட்கள்கைமா/ சீரக சம்பா நெல், கோழிக் கறி, மசாலாப் பொருள்
உணவு ஆற்றல்
(per பரிமாறல்)
250 kcal (1047 kJ)
பிற தகவல்கள்பக்க உணவுகள்
பச்சடி, தேங்காய் சட்னி, ஊறுகாய்
Cookbook: தலச்சேரி உணவு  Media: தலச்சேரி உணவு

தலச்சேரி உணவு (Thalassery Cuisine) என்பது வடக்குக் கேரளாவிலுள்ள தலச்சேரி நகரின் உணவின் தனித்துவத்தை குறிக்கிறது, அதன் நீண்ட வரலாற்றில் ஒரு விளைவாக அரேபியன், பெர்ஷியன், இந்திய மற்றும் ஐரோப்பிய வகைகளில் கடல்வழி வர்த்தகத்தின் மூலம் அது கலந்திருக்கிறது. தலச்சேரி அதன் பிரியாணி மூலம் அறியப்படுகிறது.[1] மற்ற பிரியாணி உணவு வகைகளை போலல்லாமல் தலச்சேரி பிரியாணி வழக்கமாக பயன்படுத்தும் பாசுமதி அரிசிக்கு பதிலாக கைமா / சீரக சம்பா அரிசி போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.[2] குறிப்பாக முஸ்லீம் சமூகத்தின் உணவுகளில் அரேபிய / முகலாய கலாச்சாரத்தின் செல்வாக்கு தெளிவாக தெரிகிறது, பின்னர், இது அனைத்து சமூகங்களிடையேயும் பிரபலமாகி விட்டன.[3]

சிறிய தூள் கைமா / சீரக சம்பா அரிசி (இடது) மற்றும் நீண்ட தூள் பாசுமதி அரிசி (வலது). தலச்சேரி பிரியாணி செய்ய பயன்படுத்தப்படுகிறது.

கேரள நவீன வரலாற்றில் முன்னோடியாக அடுமனை தொழிலில் தலச்சேரி ஒரு சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. 1880 இல் மாம்பாலி பாபு மூலம் முதல் அடுமனை தொடங்கப்பட்டது. மேலும் 1883 ஆம் ஆண்டில் மேற்கத்திய பாணி அணிச்சல்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.[4][5]

மலபார் உணவு[தொகு]

தயார் நிலையில் தலச்சேரி பிரியாணி

கேரளாவில் அசைவ உணவுகளில் இரண்டு வகைகள் உள்ளன. மலபார் உணவு வடக்கு கேரளாவிலும் மற்றும் சிரிய கிரிஸ்துவர் உணவு தெற்கிலிருந்தும் (திருவாங்கூர் மற்றும் கொச்சி மண்டலங்களிலிருந்து) வந்த வகைகளாகும். இரண்டும் ஒன்றுக்கொன்று வித்தியாசம் கொண்டுள்ளன. மலபார் உணவு மொகலாய-அரபு, போர்த்துகீசியம், பிரிட்டிஷ், டச்சு, யூத மற்றும் பிரெஞ்சு தாக்கங்கள் மற்றும் தென்னிந்தியாவில் உள்ள கேரள பாரம்பரிய உணவுகளின் வகைகளைக் கொண்டுள்ளது. சிரிய கிரிஸ்துவர் உணவு, டச்சு, போர்த்துகீசியம் அல்லது பிரிட்டிஷ் வம்சத்தின் பல்வேறு சமையல் குறிப்புகளை உள்ளடக்கியது.[6][7]

கோழிக்கோடு அல்வா

தலச்சேரி ஃபலூடா[தொகு]

தலச்சேரி ஃபலூடா என்பது பாரசீக இனிப்பு வகைகளில் ஒன்றாகும். இது பழங்களின் கலவை, உலர்ந்த பழங்கள் உலர் திராட்சை , பிஸ்தா , முந்திரி , வாதுமை பருப்பு, ரோஜா இதழின் சாரம் கலந்த பால் மற்றும் வெண்ணிலா சுவையுடன் கூடிய பனி கூழ் போன்றவை அடங்கிய கலவையாகும்.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Thalassery biryani
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலச்சேரி_உணவு_முறை&oldid=2700949" இருந்து மீள்விக்கப்பட்டது