உள்ளடக்கத்துக்குச் செல்

தலசாரி கடற்கரை

ஆள்கூறுகள்: 21°37′22.67″N 87°24′21.07″E / 21.6229639°N 87.4058528°E / 21.6229639; 87.4058528
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடற்கரையில் வரிசையாக நிற்கும் பனை மரங்கள்
சூரிய மறைவின் போது கடற்கரையின் காட்சி
சுபர்ணரேகா ஆற்றில் குறைந்த அலையின் போது தலசாரியில் எடுக்கப்பட்ட பீங்கான் நண்டு

தலசாரி கடற்கரை (Talasari Beach) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலம் பாலேசுவர் மாவட்டத்தில் உள்ள கடற்கரை ஆகும். இது இந்தியாவின் வடகிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ளது.

தலசாரி என்ற பெயர் இரண்டு ஒடியா சொற்களான தலாவும் (ତାଳ) (பனை) சாரி/சாரணியும் (ସାରି/ସାରଣୀ) இணைத்துப் பெறப்பட்டது. இந்த இடத்தைச் சுற்றி பனை மரங்கள் வரிசையாக இருப்பதால் இதற்கு இப்பெயர் வழங்கப்பட்டது. தலா என்ற சொல்லுக்கு தாளம் என்றும் பொருள்படும் எனவும் கூறப்படுகிறது. இது கடல் அலைகளினால் ஏற்படும் அலையோசையினைப் பிரதிபலிக்கிறது.

சுபர்ணரேகா ஆறு தலாசாரி கடற்கரையின் காட்சி ஈர்ப்பை அதிகரிக்கிறது. கடற்கரையில் உள்ள மணல் குன்றுகளும் சிவப்பு நண்டுகளும், அருகிலுள்ள மீன்பிடிக் குக்கிராமங்கள், பிச்சித்ரபூரில் உள்ள சதுப்புநில மரங்கள் ஆகியவை இப்பகுதியின் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பிற இடங்களாகும்.

கண்ணோட்டம்

[தொகு]
ஒடிசாவின் தலசாரி கடற்கரையில் சிவப்பு நண்டுகள்.

இந்த இடத்தில் பரந்த அளவிலான பசுமையான நெல் வயல்கள், ஏராளமான ஆறுகள், நீல மலைகள், விரிவான கடற்கரைகள் உள்ளன. கடற்கரையில் உயரமான தென்னை மரங்கள், பனை மரங்கள், சவுக்கு மரங்கள் உள்ளன. உதய்பூர் கடற்கரை இந்தப் பகுதியின் கடைசியாக உள்ளக் கடற்கரையாகும்.

நீரோடை நிரம்பி வழியும் போது, படகு உதவியுடன் மட்டுமே பிரதானக் கடற்கரையை அடைய முடியும். ஆனால் மற்ற நேரங்களில், வறண்ட ஆற்றுப் படுகை வழியாக நடந்து செல்லலாம். இந்த இடம் ஓரளவு காற்று வீசும் இடமாக அமைந்துள்ளது.

ஒடிசாவில் மக்கள் குறைவாகக் கூடுமிடமாக இக்கடற்கரை உள்ளது. ஒடிசாவின் மற்ற கடற்கரைகளைப் போல தலசாரி கடற்கரைக்கு மக்கள் அடிக்கடி அதிகமாக வருவதில்லை. தலசாரி கடற்கரையில் உள்ள கடல் கொந்தளிப்பாக இல்லாமல் அமைதியாக இருக்கும்.

இது வடக்கில் ஒடிசாவின் கடைசி கடற்கரையாகும்.

புவியியல்

[தொகு]

புவியியல் ரீதியாக தலசாரி 21° 35'48 "N அட்சரேகைக்கும் 87° 27'17" E தீர்க்கரேகைக்கும் இடையில் அமைந்துள்ளது.

தலசாரியின் கடற்கரை மீன்பிடி கிராமங்களுக்கும், கடல் உணவுகளுக்கும் ஓரளவு மக்கள் மத்தியில் பிரபலமானது. தீகா கடற்கரை தலசாரி கடற்கரையிலிருந்து 7 கி. மீ. மட்டுமே தொலைவில் உள்ளது.

காலநிலை

[தொகு]

இந்த இடத்தில் ஆண்டு முழுவதும் 156.84 செ.மீ. மழைப்பொழிவினைப் பெறுகிறது. கோடைக் காலத்தில், வெப்பநிலை அதிகமாக இருக்கும். சில நேரங்களில் 40 பாகை செல்சியசு வரை வெப்பம் அடையும். குளிர்காலத்தில், 14 பாகை செல்சியசாக இருக்கும்.

போக்குவரத்து

[தொகு]

ஒடிசாவில் தலசாரி ஜலேசுவரிலிருந்து 36 கி,மீ. தொலைவில் உள்ளது. அருகிலுள்ள தொடருந்து நிலையம் ஜலேசுவரில் உள்ளது. கொல்கத்தா அருகிலுள்ள வானூர்தி நிலையம் ஆகும். இது தலசாரியிலிருந்து 180 கி.மீ. தூரத்தில் உள்ளது. இது பாலேசுவருடன் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மேற்கு வங்கத்தின் திகாவிலிருந்து தலசாரி 8-10 கி.மி. தூரத்தில் உள்ளது. ஹவுராவிலிருந்து புதிய திகாவிற்கு தொடருந்துச் சேவைத் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு மகிழ்வுந்தில் திகா தொடருந்து நிலையத்திலிருந்து தலசாரிக்கு சுமார் 15 நிமிடப் பயணத்தில் சென்றடையலாம்.

சுற்றுலா இடங்கள்

[தொகு]
கடற்கரையோரம் உள்ள குன்றுகள்

பிப்ரவரியில், முந்திரி மரங்களில் காணப்படும், சிவப்பு, ஆரஞ்சு மலர்கள், முந்திரிப் பருப்பு பழத்திற்கு வெளியே தொங்குவதைக் காணலாம்.

ஒடிசா அரசால் நடத்தப்படும் ஒரு சில சிறிய உணவகங்கள், பந்தாசாலாவும் உள்ளன.

கடற்கரை மிகவும் தட்டையானது. அலைகள் அதிக அளவில் இருக்காது. எனவே கடற்கரை விளையாடுவதற்குச் சிறந்தது. சுபர்ணரேகா ஆற்றின் முகத்துவாரத்தைத் தூரத்திலிருந்து காணலாம்.

காலையில் மீன் சந்தையாகச் செயல்படும் கடற்கரையில் ஒரு படகு குலாம் உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

21°37′22.67″N 87°24′21.07″E / 21.6229639°N 87.4058528°E / 21.6229639; 87.4058528

"https://ta.wikipedia.org/w/index.php?title=தலசாரி_கடற்கரை&oldid=4183342" இலிருந்து மீள்விக்கப்பட்டது