தலகாங் மாவட்டம்
தலகாங்
ضلع تلہ گنگ | |
|---|---|
மாவட்டம் | |
சிதிலமடைந்த சஸ்சி தா கல்லார் கோயில் | |
| ஆள்கூறுகள்: 32°55′40″N 72°24′40″E / 32.92778°N 72.41111°E | |
| நாடு | |
| மாகாணம் | பஞ்சாப் |
| கோட்டம் | இராவல்பிண்டி |
| நிறுவிய ஆண்டு | 14 அக்டோபர் 2022 |
| தலைமையிடம் | தலகாங் |
| அரசு | |
| • வகை | மாவட்டம் (நிர்வாகி-துணை ஆணையாளர்]] |
| பரப்பளவு | |
| • மாவட்டம் | 2,932 km2 (1,132 sq mi) |
| மக்கள்தொகை (2023)[1] | |
| • மாவட்டம் | 6,02,246 |
| • அடர்த்தி | 210/km2 (530/sq mi) |
| • நகர்ப்புறம் | 1,00,050 (16.61%) |
| • நாட்டுப்புறம் | 5,02,196 (83.39%) |
| நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
| வருவாய் வட்டங்கள் | 3 |
தலகாங் மாவட்டம் (Talagang District), பாக்கித்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் 41 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் தலகாங் நகரம் ஆகும். தலகாங் நகரமானது, பஞ்சாப் மாகாணத் தலைநகரான லாகூருக்கு வடமேற்கே 299.4 கிலோமீட்டர் தொலைவிலும், நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தென்மேற்கே 138 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
புவியியல் & மாவட்ட எல்லைகள்
[தொகு]இம்மாவட்டத்தின் ஒரு பகுதி போத்தோகர் பீடபூமியில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் வடக்கில் உப்பு மலைத்தொடர்களும், கிழக்கில் காலா சிட்டா மலைத்தொடர்களும் அமைந்துள்ளது.
இம்மாவட்டத்தின் வடக்கில் அட்டோக் மாவட்டம், வடகிழக்கில் ராவல்பிண்டி மாவட்டம், கிழக்கில் சாகிவால் மாவட்டம், தென்கிழக்கில் குசாப் மாவட்டம் மற்றும் தென்மேற்கில் மியான்வாலி மாவட்டம் எல்லைகளாக உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 101,362 குடியிருப்புகள் கொண்ட இம்மாவட்ட மக்கள் தொகை 602,246 ஆகும்.[2]பாலின விகிதம் 100 பெண்களுக்கு 100.53 ஆண்கள் வீதம் உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 74.63% ஆகும்..[1][3]இதன் மக்கள் தொகையில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 131,597 (21.85%) ஆக உள்ளனர்.[4]நகர்புறங்களில் 100,050 (16.61%) மக்கள் வாழ்கின்றனர். [1]
சமயங்கள்
[தொகு]இம்மாவட்டத்தில் இசுலாம் சமயத்தை 99.60% மக்களும், கிறித்துவத்தை 0.38% மக்களும் மற்றும் பிற சமயங்களை 0.02% மக்களும் பின்பற்றுகின்றனர்.[5]
மொழிகள்
[தொகு]இம்மாவட்டத்தில் பெரும்பாலான மக்கள் பஞ்சாபி மொழி மற்றும் உருது மொழிகளைப் பேசுகின்றனர்.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]| வருவாய் வட்டம்[6] | பரப்பளவு
(km²)[7] |
மக்கள் தொகை
(2023) |
மக்கள்தொகை அடர்த்தி
(ppl/km²) (2023) |
எழுத்தறிவு %
(2023)[8] |
ஒன்றியக் குழுக்கள் |
|---|---|---|---|---|---|
| தலகாங் வட்டம் | 2,022 | 457,635 | 226.33 | 75.63% | 19 |
| லாவா வட்டம் | 910 | 144,611 | 158.91 | 71.37% | 5 |
| முல்தான் குர்து வட்டம் | ... | ... | ... | 75.63% | ... |
படக்காட்சிகள்
[தொகு]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "7th Population and Housing Census - Detailed Results: Table 1" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "7th Population and Housing Census - Detailed Results: Table 20" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "7th Population and Housing Census - Detailed Results: Table 12" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "7th Population and Housing Census - Detailed Results: Table 5" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "Population by Sex, Religion and Rural/Urban, Census-2023" (PDF). Pakistan Bureau of Statistics. 2023. Retrieved 2 Aug 2024.
- ↑ Divisions/Districts of Pakistan பரணிடப்பட்டது 2006-09-30 at the வந்தவழி இயந்திரம் Note: Although divisions as an administrative structure has been abolished, the election commission of Pakistan still groups districts under the division names
- ↑ "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, PUNJAB" (PDF).
- ↑ "LITERACY RATE, ENROLMENT AND OUT OF SCHOOL POPULATION BY SEX AND RURAL/URBAN, CENSUS-2023" (PDF).