தற்காலிக மெனிங் அரசியலமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தற்காலிக மெனிங் அரசியலமைப்பு இலங்கையில் 1921 முதல் 1924 வரை அமுலிலிருந்த அரசியலமைப்பு இதுவாகும். பிரித்தானியரால் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட மூன்றாவது அரசியலமைப்பும் இதுவே. இந்த அரசியலமைப்பின் கீழ் அமைக்கப்பட்ட சட்ட நிரூபண சபை(சட்டசபை)யின் கட்டமைப்பு வருமாறு:

சட்டநிரூபண சபை[தொகு]

சட்டநிரூபண சபையின் மொத்த அங்கத்தவர் எண்ணிக்கை 37 இதில்

 • உத்தியோக சார்பற்றோர் 23.
 • உத்தியோக சார்புள்ளோர் 14,

உத்தியோக சார்பற்றோர்[தொகு]

உத்தியோக சார்பற்ற அங்கத்தவர் எண்ணிக்கை, உத்தியோக சார்புள்ள அங்கத்தவர் எண்ணிக்கையை விட முதல் தடவையாக அதிகரிக்கப்பட்டது. உத்தியோக சார்பற்றோர் எண்ணிக்கை 23 ஆகும். இதில் தெரிவின் மூலம் 16 பிரதிநிதிகளும் நியமனமாக 7 பிரதிநிதிகளும் இடம் பெற்றனர்.

தெரிவின் மூலம் - 16[தொகு]

தெரிவு செய்யப்பட்ட 16 பிரதிநிதிகளுள் 11 பிரதிநிதிகள் பிரதேச ரீதியாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

பிரதேச ரீதியாகத் தெரிவுசெய்யப்பட்டோர் - 11

இன ரீதியான தெரிவுசெய்யப்பட்டோர் - 3

 • நாட்டுப்புற ஐரோப்பியர் - 1
 • நகர்ப்புற ஐரோப்பியர் - 1
 • பறங்கியர் - 1

சங்கங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்டோர் -2

 • கீழ்நாட்டுப் பெருந்தோட்ட சங்கம் - 1
 • வர்த்தக சங்கப்பிரதிநிதி - 1

தேசாதிபதியால் நியமிக்கப்படுவோர் - 7[தொகு]

 • கண்டிச் சிங்களவர் - 2
 • இந்தியர் - 1
 • முஸ்லிம் - 1
 • சிறப்பு - 3

உத்தியோக சார்புள்ளோர் 14[தொகு]

முக்கிய அம்சங்கள்[தொகு]

தற்காலிக மெனிங் அரசியலமைப்பின் முக்கிய அம்சங்கள்

 • இலங்கை அரசியல் வரலாற்றில் முதற்தடவையாக பிரதேச ரீதியான தெரிவு அறிமுகப்படுத்தப்பட்டமை
 • இலங்கை அரசியல் வரலாற்றில் மிகவும் குறுகியகால அரசியலமைப்பு (சுமார் இரண்டரை வருடங்கள்)
 • சட்டநிர்வாக சபையில் (நிர்வாகத்துறையில்) 3 உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்களுக்கு இடம் வழங்கப்பட்டமை
  • ஐரோப்பா - 1
  • சிங்களவர் - 1
  • தமிழர் - 1

உசாத்துணை[தொகு]

 • மெண்டிஸ், ஜீ. ஸி - நம்முன்னோரளித்த அருஞ்செல்வம், முதலாம் பாகம், கொழும்பு அப்போதிக்கரீஸ் கம்பனி, 1969
 • புன்னியாமீன் பீ. எம்., - வரலாறு ஆண்டு 11 கண்டி சிந்தனை வட்டம், 1998