தற்காலிக நீதிபதி (இந்திய உயர் நீதிமன்றம்)
தற்காலிக நீதிபதி,இந்திய அரசியலமைப்பின் பிரிவு 224A இன் கீழ், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளை மீண்டும் தற்காலிக அடிப்படையில், உயர் நீதிமன்ற நீதிபதிகளாகப் பணியில் அமர்த்த இந்திய உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.[1]இதற்கு இந்திய உச்ச நீதிமன்றம் 30 சனவரி 2025 அன்று வரையறைகள் வகுத்தது.[2][3][4]
வரையறைகள்
[தொகு]- ஒரு உயர் நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளில் 10% அல்லது 2 முதல் 5 வரையிலான தற்காலிக நீதிபதிகளை, குடியரசுத் தலைவரின் முன் அனுமதியுடன், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் நியமிக்கலாம்.
- உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான அமர்வில் மட்டும், தற்காலிக நீதிபதி, நிலுவையில் உள்ள குற்றவியல் மேல்முறையீடு வழக்குகளை விசாரணை செய்து தீர்ப்புகள் வழங்கலாம்.
- தற்காலிக நீதிபதிகளுக்கும் மற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு உள்ள அதிகாரம், கடமைகள் உள்ளதுடன், குடியரசுத் தலைவரால் அனுமதிக்கப்படும் ஊதியம் வழங்கப்படும்.
பின்னணி
[தொகு]சனவரி 25, 2025 நிலவரப்படி, இந்திய உயர் நீதிமன்றங்களில் 1.82 மில்லியன் குற்றவியல் வழக்குகளும், 44,000க்கும் மேற்பட்ட குடிமை வழக்குகளும் நிலுவையில் உள்ளன என்று தேசிய நீதித்துறை தரவுகள் தெரிவித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு இந்திய உச்ச நீதிமன்றம் 30 சனவரி 2025 அன்று வழங்கிய தீர்ப்பில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளே, தற்காலிக அடிப்படையில், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளை, உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமிக்கலாம் எனத் தீர்ப்பு வழங்கியது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Appointment of retired Judges at sittings of High Courts
- ↑ Supreme Court relaxes rules for High Courts to appoint ad-hoc judges
- ↑ Why did the Supreme Court clear the decks for appointment of ad-hoc judges to High Courts?
- ↑ Explained| Ad Hoc Judges In High Courts : Procedure For Appointment & Tenure