உள்ளடக்கத்துக்குச் செல்

தற்காலிக திருமணம் (இஸ்லாம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தற்காலிக திருமணம் அல்லது நிக்கா முத்தாஹ் (Nikah mut'ah)[1][2] அரபு:نكاح المتعة) என்பது ஒரு தனிப்பட்ட மற்றும் வாய்மொழியான தற்காலிக திருமண ஒப்பந்தமாகும். பன்னிருவர் சியா இசுலாமியப் பிரிவினர் இவ்வகை திருமணத்தை மேற்கொள்கின்றனர்.[3] இதில் திருமணத்தின் காலம் மற்றும் மஹர் எனும் மணக்கொடை இருக்க வேண்டும்.  இஸ்லாத்தில் உள்ள மற்ற திருமண முறைகளைப் போலவே, தற்காலிக திருமணத்திலும் விதிமுறைகளை ஏற்பது அவசியமானது.[4]

ஒரு தற்காலிக திருமணத்தின் காலம் மாறுபடும். இவ்வகைத் திருமணம் ஒரு மணிநேரம் முதல் தொண்ணூற்றொன்பது ஆண்டுகள் வரை இருக்கலாம். பாரம்பரியமாக, ஒரு தற்காலிக திருமணத்திற்கு சாட்சிகள் அல்லது பதிவு தேவையில்லை. இருப்பினும் சாட்சிகளை எடுத்துக்கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது.இஸ்லாம் குறித்தான ஆக்ஸ்போர்டு அகராதி, இவ்வகை திருமணத்தின் குறைந்தபட்ச கால அளவு மூன்று நாட்கள், மூன்று மாதங்கள் அல்லது ஒராண்டு காலம் எனப்பரிந்துரைக்கிறது. [1]

சன்னிகளும், சியாக்களும் இந்த திருமணம் இஸ்லாத்திற்கு முந்தைய அரபு பாரம்பரியம் என்றும் குர்ஆனால் தடை செய்யப்படவில்லை என்றும் ஒப்புக்கொள்கிறார்கள். ஷியாக்களின் கூற்றுப்படி, இந்த பாரம்பரியம் முகமதுவால் அங்கீகரிக்கப்பட்டது மற்றும் அவரது வாழ்நாளில் முஸ்லிம்களிடையே தொடர்ந்தது. சுன்னிகளின் கூற்றுப்படி, இந்த நடைமுறை ஆரம்பத்தில் முகமதுவால் அங்கீகரிக்கப்பட்டாலும், பின்னர் அது அவரால் தடைசெய்யப்பட்டது. தடையில் கலீஃபா உமரின் கூர்மையான பங்கை இரு தரப்பும் வலியுறுத்துகின்றன.[5]

சில முஸ்லீம்கள் மற்றும் மேற்கத்திய அறிஞர்கள் நிக்காஹ் முத்தாஹ் மற்றும் நிக்காஹ் மிஸ்யார் ஆகிய இரண்டும் இஸ்லாமிய ரீதியாக தடைசெய்யப்பட்ட விபச்சாரத்தை அனுமதிக்கும் முயற்சிகள் என்று கூறியுள்ளனர்.[6] [7][8]

பின்னணி

[தொகு]

முத்தா என்பதற்கு மகிழ்ச்சி என்று பொருள்.. நிக்கா முத்தாவில் கணவன் மனைவிக்கு சில உரிமைகள் இல்லை . இதில் முக்கியமாக நிக்கா முத்தா முறையில் மணந்த மனைவியுடன் வீட்டில் இருக்க முடியாது மற்றும் நிறைய பயணம் செய்பவர்களால் இத்திருமண முறை பயன்படுத்தப்பட்டது. உதாரணமாக, வெளிநாடுகளில் மாதக்கணக்கில் பயணம் செய்யும் ஒரு வியாபாரி, விவாகரத்து பெற்ற விதவையை திருமணம் செய்து கொள்ளலாம்.[9] அவர்கள் ஒருவரை ஒருவர் கவனித்துக் கொள்வார்கள். அடுத்த ஊருக்குப் போகும்போது, திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு, அடுத்த இடத்தில் முத்தா ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Esposito J. "The Oxford Dictionary of Islam." பரணிடப்பட்டது 25 நவம்பர் 2015 at the வந்தவழி இயந்திரம் Oxford University Press 2003 p221 Accessed 15 March 2014.
  2. "Temporary 'Enjoyment Marriages' in Vogue Again with Some Iraqis". The Washington Post இம் மூலத்தில் இருந்து 3 March 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170303015306/http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2007/01/19/AR2007011901850.html. 
  3. "I do... for now. UK Muslims revive temporary marriages". BBC News. 13 May 2013 இம் மூலத்தில் இருந்து 22 July 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180722123210/https://www.bbc.com/news/uk-22354201. 
  4. "Welcome to Encyclopaedia Iranica".
  5. According to a number of traditions, the second caliph, ʿOmar, outlawed the custom of motʿa marriage, regarding it as a form of fornication, thus implying that its practitioners could face stoning.https://iranicaonline.org/articles/mota
  6. Turner, Bryan S. (1 January 2003). Islam: Islam, gender and family (in ஆங்கிலம்). Taylor & Francis US. p. 157. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780415123501.
  7. Meri, Josef W.; Bacharach, Jere L. (1 January 2006). Medieval Islamic Civilization: L-Z, index (in ஆங்கிலம்). Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780415966924.
  8. Pohl, Florian (1 September 2010). Muslim World: Modern Muslim Societies. Marshall Cavendish. pp. 52–53. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780761479277. பார்க்கப்பட்ட நாள் 5 April 2013.
  9. 'Nikah Mut'ah': The Rising Trend of 'Temporary Marriages' Among Tourists In Indonesia