தர்ஸ்டனின் ஏழு வகையான நுண்ணறிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தர்ஸ்டனின் ஏழு வகையான நுண்ணறிவுஎன்பது மனத்திறன்களின் அடிப்படையில் அமைந்தவை.இவை ஏழும் தனித்தன்மை கொண்டது.இவை ஒவ்வொன்றும் நுண்ணறிவின் வெவ்வேறு திறன்களை அளப்பவை.

  1. சொல்லாற்றல்
  2. சொல்வேகத்திறன்
  3. எண்ணாற்றல்
  4. இட ஆற்றல்
  5. நினைவாற்றல்
  6. புலன்காட்சி வேகம்
  7. கரணகாரிய தொடர்பு
1.சொல்லற்றல் 

சொற்களால் குறிக்கப்படும் பொதுக்கருத்துகளின் பொருள்களை உணர்ந்து அவற்றை சிந்தனையில் பயன்படுத்தும் திறன்.

2. சொல்வேகத்திறன்

வேகமாக சொற்ககளைப் புரிந்துகொள்ளவும் வெளிப்படுத்தவும், நினைக்கவும் அவற்றைப் பயன்படுத்தவும் கூடிய ஆற்றல்.

3. எண்ணாற்றல் 

அடிப்படை கணிதச் செயல்களை வேகமாகவும் சரியாகவும் செய்யும் ஆற்றல்.

4. இட ஆற்றல் 

புறவெளியில் உள்ள பொருட்களையும் அவற்றிற்கிடையேயுள்ள தொடர்புகளையும் அறியும் ஆற்றல்.

5.நினைவாற்றல்

கருத்துகள்,நிகழ்வுகளை விரைவில் மனதில் பதிய வைத்து தேவைப்படும்போது மீட்டுக்கொணரும் ஆற்றல்.

6.புலன்காட்சி வேகம் 

வேகமாவும்,சரியான தூண்டலகள் பொருள்களை கண்டறியும் திறன்.

7. கரணகாரிய தொடர்பு

இதனால் இது விளையும். இந்தவிளைவிற்கு இது தான் காரணம்" என்பன போன்ற தொடர்பை அறியும் திறன் போன்றவை.

மேற்கோள்[தொகு]

[1]

  1. வளநூல் குழு (2008). நுண்ணறிவு. தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம். பக். 70.