தர்ம நாராயண் பர்மா
தர்ம நாராயண் பர்மா | |
|---|---|
| பிறப்பு | நவம்பர் 10, 1935 |
| படித்த கல்வி நிறுவனங்கள் | கல்கத்தா பல்கலைக்கழகம் |
தர்ம நாராயண் பர்மா (Dharma Narayan Barma) இந்தியாவிலுள்ள மேற்கு வங்காளத்தின் கூச் பெகரைச் சேர்ந்த ஒரு சமசுகிருத ஆசிரியர் ஆவார். காம்தாப்பூர் மொழியை மேம்படுத்துவதில் செய்த பணிகளுக்காக இவர் அறியப்படுகிறார்.[1] கலை மற்றும் இலக்கியத்திற்கு செய்த பங்களிப்புகளுக்காக 2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமக்கள் விருதான பத்மசிறீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.[2]
ஆரம்பகால வாழ்க்கை.
[தொகு]தர்ம நாராயண் பர்மா 1935 ஆம் ஆண்டில் பிறந்தார், 1959 ஆம் ஆண்டு கல்கத்தா பல்கலைக்கழகத்தில் சமசுகிருதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் கல்கத்தாவின் பெருநகர மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். அதன்பிறகு இவர் கூச் பெகருக்குத் திரும்பினார், அங்கு ஓய்வு பெறும் வரை நிருபேந்திர நாராயண் நினைவு உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார்.[3]
விருதுகள்
[தொகு]2021 ஆம் ஆண்டில் இந்திய அரசிடமிருந்து பத்மசிறீ விருது இவருக்கு கிடைத்தது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rajbanshis' salience in Bengal politics surfaces as TMC, BJP lock horns over Kaliaganj flare-up". The Indian Express (in ஆங்கிலம்). 2023-04-26. Retrieved 2023-12-11.
- ↑ "West Bengal: ‘Bantul the Great’ creator wins Padma Shri". The Times of India. 2021-01-26. https://timesofindia.indiatimes.com/city/kolkata/bantul-the-great-creator-wins-padma-shri/articleshow/80456930.cms.
- ↑ 3.0 3.1 https://www.padmaawards.gov.in/Content/CitationsForTickets/2021/202125.pdf