தர்மவரம் இராமகிருஷ்ணமாச்சாரியலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தர்மவரம் இராமகிருஷ்ணமாச்சாரியலு
பிறப்பு1853
பிரித்தானிய இந்தியா அனந்தபூர் மாவட்டம், தர்மவரம்
இறப்பு1912
தொழில்வழக்கறிஞர்
தேசியம்பிரித்தானிய இந்தியர்
குடியுரிமைபிரித்தானிய இந்தியா
கல்விமெட்ரிகுலேசன், F.A.
வகைநாடக ஆசிரியர், கவிஞர், நடிகர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்சித்ரனாலயம்
குறிப்பிடத்தக்க விருதுகள்ஆந்திர நாடகப் பிதாமகன்
குடும்பத்தினர்பெல்லாரி ராகவா, தர்மவரம் கோபாலச்சாரியலு

தர்மவரம் ராமகிருஷ்ணமாச்சாரியலு (1853-1912) என்பவர் பெல்லாரியைச் சேர்ந்த புகழ்பெற்ற தெலுங்கு நாடகக் கலைஞரும் நாடக ஆசிரியரும் ஆவார். இவர் "ஆந்திர நாடகப் பிதாமகன்" என்று அழைக்கப்பட்டார். இவர்  30 க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவர் 1853 ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள தர்மவரம் நகரில் பிறந்தார் (கார்த்திகை சுதா ஏகாதசி). இவரது பெற்றோர் கிருஷ்ணமாச்சார்யுலு மற்றும் லட்சுமிதேவம்மா ஆவர். இவரது குடும்ப பெயர் கோமண்டுரு ஆகும். இவர் தன் 16 ஆம் வயதில் தன் தந்தையை இழந்தார். இதனால் குடும்பச் சுமை இவரது தோள்களில் விழுந்தது. மெட்ரிகுலேஷனுக்குப் பிறகு, இவர் நகராட்சி உயர்நிலைப் பள்ளி மற்றும் அடோனி தாலுகா அலுவலகத்தில் சிறிது காலம் பணியாற்றினார். பின்னர் இவர் பெல்லாரிக்குத் திரும்பி, கன்டோன்மென்ட்டில் வழக்கறிஞராகப் பயிற்சி பெறத் தொடங்கினார். திருமணமான உடனேயே மனைவியை இழந்த இவர் பின்னர் லட்மிதேவம்மாவை மணந்தார். இவர் 1874 இல் முதல் வகுப்பில் பிளேடர் தேர்விலும், எஃப்.ஏ தேர்விலும் தேரினார். சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்து, உண்மையை வெளிக்கொணரும் கலையில் தேர்ச்சி பெற்றதால் இவரது வழக்கறிஞர் தொழில் நன்கு செழித்தது. இவருக்கு மூன்று சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் இருந்தனர். இவரது சகோதரிகள் பெத்த சேஷம்மா, சின்ன சேஷம்மா, கிருஷ்ணம்மா ஆகியோராவர். பெத்த சேஷம்மா பெல்லாரி ராகவாவின் தாயார் ஆவார். இவரது சகோதரர்கள் தர்மவரம் கோபாலாச்சார்லு, வெங்கட கிருஷ்ணமாச்சார்யுலு, சேஷாச்சார்யுலு ஆவர்.

துவக்கம்[தொகு]

1871-73க்கு இடையிலான பஞ்சகாலத்தின் போது, இவரும் இவரது நண்பர்களும் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்வதற்காக வீர சங்கம் என்ற சங்கத்தை நிறுவினர். பஞ்சத்திற்குப் பிறகு இது விவாத சங்கமாக மாற்றப்பட்டது. இவர் ஆரம்பத்தில் நான்கு குறுநாடகங்ளை எழுதினார், அவை உடனடியாக வெற்றிபெற்றன. இதனால் 1888 ஆம் ஆண்டில், சங்கமானது புகழ்பெற்ற சரசா வினோதினி சபாவா என மாற்றப்பட்டது. 1881 இல் ராஜதானி நடக மண்டலி அரங்கேற்றிய கன்னட நாடகங்களின் வெற்றியால் உந்தப்பட்ட இவரது சகோதரர் கோபாலாச்சார்யு தெலுங்கில் ஒரு நாடகம் எழுதி அதை அரங்கேற்றினார். இது பொதுமக்களிடம் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.   அவமதிக்கப்பட்டதாக உணர்ந்த கிருஷ்ணமாச்சாரியலு கன்னட ஸ்வப்னா நிருத்தமுவில் ஒரு நாடகத்தை எழுதி 1886 இல் அரங்கேற்றினார். இந்த நாடகம் பொதுமக்களை மிகவும் கவர்ந்தது. தெலுங்கு மொழி நாடக வடிவமைப்பிற்கு ஏற்றதல்ல என்று ஒரு கருத்து இருந்தது. ஓரளவு எழுதப்பட்ட தெலுங்கு நாடகமான சித்ரா நலியம் நாடகத்தை மேலும் செம்மைப்படுத்தி எழுதி முடித்தார். இவரே நாடகத்தை இயக்கியும், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து 29 ஜனவரி 1887 இல் அரங்கேற்றினார். இந்த நாடகம் பெரும் வெற்றியைப் பெற்றது, இதன் மூலம் தெலுங்கு மொழி நாடகத்திற்கு ஏற்றது அல்ல என்ற தவறான எண்ணம் நீக்கப்பட்டது. இதையடுத்து இவர் சுமார் 29 நாடகங்களை அடுத்தடுத்து எழுதி அவற்றை மிக வெற்றிகரமாக நடத்தினார். நாடகத்தில் பாடல்களையும் கவிதைகளையும் அறிமுகப்படுத்தினார். இவரின் குழுவினர் 1891 இல் சென்னை விக்டோரியா பொது மண்டபத்தில் இவரது நாடகங்களை நடத்தினர். அவை பொதுமக்களால் பெரிதும் பாராட்டப்பட்டன. இந்த நாடகங்களால் ஈர்க்கப்பட்ட பம்மல் சம்பந்த முதலியார் சுகுண விலாச சபையை நிறுவினார். அவர் தமிழில் சுமார் 90 நாடகங்களை அரங்கேற்றினார். அவர் நவீன தமிழ் நாடகத் தந்தையாக கருதப்பட்டார். அவர் ராமகிருஷ்ணமாச்சாரியலுவை தனது குருவாக அங்கீகரித்தார்.

இவரது பல நாடகங்களை சூரபி நாடக குழுவினர் நிகழ்த்தினர், இதில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று பக்த பிரகலதா, இது பின்னர் திரைப்படமாக உருவாக்கப்பட்டது. இதுவே தெலுங்கின் முதல் டாக்கி திரைப்படம் ஆகும். தல்லாவரம் ராமகிருஷ்ணமாச்சாரியலுவின் பெயர் சூட்டபட்ட பெல்லாரியில் உள்ள நாடக அரங்கமான ராமகிருஷ்ணா விலாஸ், பெல்லாரியில் இரண்டாவது நாடகக் கட்டிடம். இது பின்னர் ஸ்டார் சினிமா என்று பெயரில் திரையரங்காக மாற்றப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ponangi Sri Rama Apparao (1994). Dharmavaram Ramakrishnamacharyulu. Sahitya Akademi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788172017712. பார்க்கப்பட்ட நாள் 20 October 2008.

குறிப்புகள்[தொகு]