தர்மசுவாமின்
தர்மசுவாமின் | |
---|---|
சுய தரவுகள் | |
பிறப்பு | 1197 |
இறப்பு | 1264 |
சமயம் | பௌத்தம் |
தர்மசுவாமின் (Dharmasvamin) (Chag Lo-tsa-ba Chos-rje-dpal) என்பவர் 1234 முதல் 1236 வரை இந்தியாவில் பயணம் மேற்கொண்ட ஒரு திபெத்தியத் துறவியும், யாத்ரீகரும் ஆவார். உபாசாகா சோஸ்-தார் எழுதிய அவரது சுயசரிதை அந்தக் காலத்தின் நேரில் பார்த்த சாட்சியத்தை வழங்குகிறது.[1][2]
இந்தியா வருகை
[தொகு]தர்மசுவாமின் இந்திய சுற்றுப்பயணத்தின் நோக்கம் புத்த கயா செல்வதும், இந்திய அறிஞர்களுடன் புத்த நூல்களைப் படிப்பதும் ஆகும். இருப்பினும், அவர் இந்தியாவை அடையும் நேரத்தில், கிழக்கு இந்தியாவில் உள்ள புத்த தளங்கள் அழிக்கப்பட்டன.[3]
தர்மசுவாமின் வாழ்க்கை வரலாற்றின் படி, அவர் உத்தண்டபுரத்திற்கு விஜயம் செய்தபோது, அது துருக்கிய மக்கள் குழுவின் மற்றும் இராணுவத் தளபதியின் வசிப்பிடமாக இருந்தது. துருக்கிய இராணுவத்தால் விக்கிரமசீலா முற்றிலும் அழிக்கப்பட்டது. நாளந்தாவில், 80 சிறிய விஹாரங்கள் இருந்தன, அவை துருஷ்கர்களால் சேதப்படுத்தப்பட்ட பின்னர் கைவிடப்பட்டன, மேலும் இரண்டு விஹாரங்கள் மட்டுமே செயல்பட்டன.[4] நூற்றுக்கும் குறைவான துறவிகள் அங்கு வசித்து வந்தனர், மேலும் பித்திபதி வம்சத்தைச் சேர்ந்த புத்தசேனா என்ற உள்ளூர் மன்னர் நாளந்தாவின் 90 வயதான மடாதிபதி ராகுல சிறீபத்ராவுக்கு நிதி உதவினார்.[5]
ராகுல சிறீபத்ரா தர்மசுவாமினை ஒரு மாணவராக ஏற்றுக்கொண்டார், மேலும் இருவரும் சமசுகிருத புத்த நூல்களை திபெத்திய மொழியில் மொழிபெயர்த்தனர். தர்மசுவாமின் திபெத்தில் இருந்தபோது, தனது மாமா மற்றும் 9 ஆம் நூற்றாண்டின் அகராதி மகாவியுத்பட்டியின் அறிவைப் பயன்படுத்தி சமசுகிருதத்தில் தேர்ச்சி பெற்றார். சமசுகிருதம் மீதான அவரது ஆளுமை மிகவும் வலிமையானதாக இருந்தது, அவர் புத்த கயாவுக்குச் சென்றபோது அவர் ஒரு இந்தியரென்றே தவறாக நினைக்கப்பட்டார்.[6]
ராமசிம்மதேவரால் ஆளப்பட்ட மிதிலா கர்நாட் வம்சத்தின் அரசவையையும் தர்மசுவாமின் பார்வையிட்டார். ராமசிம்மதேவர் தன்னை மரியாதையுடன் நடத்தி வருவதாகவும், பௌத்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும் அரண்மனை மதகுருவாக செயல்பட அவருக்கு அனுமதி வழங்கியதாகவும் அவர் விவரித்தார்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Chos-dar, Upasaka. Biography of Dharmasvamin (Chag Lo Tsaba Chos-rje-dpal), a Tibetan Monk Pilgrim. Translated by George Roerich. Introduction by A.S. Altekar. Retrieved 24 December 2014.
- ↑ Chos-dar, Upasaka. Biography of Dharmasvamin (Chag Lo Tsaba Chos-rje-dpal), a Tibetan Monk Pilgrim. Translated by George Roerich. Introduction by A.S. Altekar. Retrieved 24 December 2014.
- ↑ Steven Kossak; Jane Casey Singer, eds. (1998). Sacred Visions: Early Paintings from Central Tibet. Metropolitan Museum of Art. p. 14. ISBN 978-0-87099-862-1.
- ↑ André Wink (2002). Al-Hind: The Slavic Kings and the Islamic conquest, 11th-13th centuries. BRILL. pp. 147–148. ISBN 0-391-04174-6.
- ↑ Steven Kossak; Jane Casey Singer, eds. (1998). Sacred Visions: Early Paintings from Central Tibet. Metropolitan Museum of Art. p. 14. ISBN 978-0-87099-862-1.
- ↑ Steven Kossak; Jane Casey Singer, eds. (1998). Sacred Visions: Early Paintings from Central Tibet. Metropolitan Museum of Art. p. 14. ISBN 978-0-87099-862-1.
- ↑ Choudhary, Radhakrishna (1970). History of Muslim rule in Tirhut, 1206-1765, A.D. (in ஆங்கிலம்). Chowkhamba Sanskrit Series Office. p. 19.