தர்பார்


தர்பார் (Durbar) என்பது பாரசீக மொழியில் மன்னருக்கு ஆலோசனை கூறும் சான்றோர் அவை அல்லது அரசவை எனப்பொருள்படும். இதனைத் தமிழில் அரசவை என்பர். இதனை தர்பார் மண்டபம் என்று அழைப்பர். முகலாயப் பேரரசர் அக்பர் இரண்டு தர்பார் மண்டங்களைக் கொண்டிருந்தார். ஒரு தர்பார் மண்டபத்தில் தன் அமைச்சர்களுடன் ஆலோசனை செய்வதற்கும், மற்றொரு தர்பார் மண்டபத்தில் பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்பதற்கும் நிறுவப்பட்டது. மன்னர்களின் பெருமையை உணரத்தக்க வகையில் தர்பார் மண்டபம் சித்திர வேலைப்பாடுகளுடன் நன்கு அலங்கரிப்பர்.தர்பார் என்பது ஒரு நாட்டினை ஆளும் மைய நிர்வாகக் குழுவாக இருந்தது. தர்பார் ஆலோசனைகளில் பெண்கள் நேரடியாகக் கலந்து கொள்லாமல், தர்பார் மண்டபத்தின் மாடத்தில் அமர்ந்து தர்பார் நடவடிக்களை காண்பர்.
பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் மேற்கு இந்தியாவில் பரோடா இராச்சியம்|பரோடா, மைசூர், ஜெய்ப்பூர், ஜோத்பூர், ஜெய்சல்மோர் போன்ற புகழ் பெற்ற சுதேச சமஸ்தான மன்னர்கள் மலைக்கோட்டையில் அரண்மனைகளுடன் கூடிய தர்பார் மண்டபத்தில் அமைச்சர்கள், படைத்தலைவர்கள் புடைசூழ ஆட்சி செய்தனர்.[1]
தென்னிந்தியாவில் மைசூர் மற்றும் ஐதராபாத் சுதேச சமஸ்தான மன்னர்கள் அழகிய அரண்மனைகளில் தர்பார் மண்டபங்களில் அரசாட்சியை நிர்வகித்தனர்.
படக்காட்சிகள்
[தொகு]-
திருமலை நாயக்கர் அரண்மனை தர்பார் மண்டபத்தில் இராணிகள் அமர்ந்திருக்கும் மாடம்
-
தர்பார் மண்டபம், ஜெய்ப்பூர், இராஜஸ்தான்
-
ஆப்கான் தர்பார் குழுவினர், ஆண்டு 1880
-
ககன் தர்பார் மண்டபம், பிஜப்பூர், கர்நாடகம்
-
மைசூர் அரண்மனையில் தர்பார் மண்டபம்
மேற்கோள்கள்
[தொகு]மேலும் படிக்க
[தொகு]- Kossak, Steven (1997). Indian court painting, 16th-19th century. New York: The Metropolitan Museum of Art. ISBN 0870997831. (see index: p. 148-152)
வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் தர்பார் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.- Rajasthan Tourism
- The Hindu
- The Hastings Museum and Art Gallery