உள்ளடக்கத்துக்குச் செல்

தர்பத்

ஆள்கூறுகள்: 26°0′15″N 63°3′38″E / 26.00417°N 63.06056°E / 26.00417; 63.06056
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தர்பத்
تربت
நகரம்
மேல்:தர்பத் மலையில் சூரிய அஸ்தமனக் காட்சி, கீழ்:மிரானி அணை
தர்பத் is located in Balochistan, Pakistan
தர்பத்
தர்பத்
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் தர்பத் நகரத்தின் அமைவிடம்
தர்பத் is located in பாக்கித்தான்
தர்பத்
தர்பத்
தர்பத் (பாக்கித்தான்)
ஆள்கூறுகள்: 26°0′15″N 63°3′38″E / 26.00417°N 63.06056°E / 26.00417; 63.06056
நாடு பாக்கித்தான்
மாகாணம்பலூசிஸ்தான்
மாவட்டம்கெச் மாவட்டம்
வருவாய் வட்டம்தர்பத் வட்டம்
பரப்பளவு
 • City420 km2 (160 sq mi)
ஏற்றம்
129 m (423 ft)
மக்கள்தொகை
 • City2,68,625
 • தரவரிசைபலூசிஸ்தானில் 2வது பெரிய நகரம். பாகிஸ்தானில் 38வது பெரிய நகரம்
 • அடர்த்தி640/km2 (1,700/sq mi)
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)
ஒன்றியக் குழு1

தர்பத் (Turbat) பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தின் தென்மேற்கில் அமைந்த இரண்டாவது பெரிய நகரம். இது மாகாணத் தலைநகரான குவெட்டாவிற்கு அடுத்த பெரிய நகரம் ஆகும். பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கெச் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியுமான தர்பத் நகரம் கெச் ஆற்றாங்கரையில் அமைந்துள்ளது. கெச் ஆற்றின் குறுக்கே மிரானி அணை உள்ளது.

பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் மக்ரான் சுதேச சமஸ்தானத்தில் தலைநகராக தர்பத் நகரம் விளங்கியது. தர்பத் நகரத்திற்கு தென்மேற்கே 180 கிலோமீட்டர் தொலைவில் குவாடர் துறைமுக நகரம் உள்ளது. இதன் தெற்கில் மக்ரான் மலைத்தொடர்கள் அரபிக்கடலை ஒட்டி அமைந்துள்ளது. இந்நகரத்தில் பலூச்சி மொழி பேசும் பலூச்சி மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இந்நகரத்தில் உள்ள கோ-இ-இமாம் ஏரி இநகர மக்களால் புனிதமாகாக் கருதப்படுகிறது. சீனா–பாக்கித்தான் பொருளாதார பாதை தர்பத் நகரம் வழியாகச் குவாடர் துறைமுகம் வரைச் செல்கிறது. தனி பலூச் நாடு கோரி போராடும் பலுசிஸ்தான் விடுதலைப்படையினர் இந்நகரத்தில், பாகிஸ்தான் பாதுகாப்பு படைகளுக்கு எதிரான ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

கல்வி

[தொகு]
  • பலூசிஸ்தான் பல்கலைக்கழகம்
  • பலூசிஸ்தான் பொறியியல் மற்றும் தொழிநுட்பப் பல்கலைக்கழகம்
  • பலூசிஸ்தான் அறிவியல், தகவல் தொழில்நுட்பம் & மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகம்
  • தர்பத் பல்கலைக்கழகம் (குவாடர்)
  • மக்ரான் பல்கலைக்கழகம் (மக்ரான்)
  • அரசு கல்வியியல் கல்லூரி
  • மக்ரான் மருத்துவக் கல்லூரி
  • அரசு அட்டா சாத் பட்டக் கல்லூரி
  • அரசு பெண்கள் பட்டக் கல்லூரி
  • பலூசிஸ்தான் உண்டு-உறைவிடக் கல்லூரி
  • சேக்கா பாத்திமா பிந்த் முபாரக் மகளிர் இராணுவப் பயிற்சிக் கல்லூரி

மக்கள் தொகை

[தொகு]

2023 பாகிஸ்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தர்பத் நகரரத்தின் மக்கள் தொகை 2,68,625 ஆக இருந்தது. இதன் மகக்ள் தொகையில் 99 % இசுலாமியர்கள் ஆவார்.

தட்ப வெப்பம்

[தொகு]

தெற்காசியாவில் கோடைக்காலத்தில் குறிப்பாக மே மாதத்தில் அதிக வெப்பம் கொண்ட நகரங்களில் ஒன்றாக தர்பத் நகரம் உள்ளது. கோடையில் அதிகபட்சம் 53.5 பாகை செல்சியஸ்[2]ஆகும். இந்நகரம் உலகின் நான்காவது அதிக வெப்பம் கொண்ட பகுதிகளில் நான்காவது இடத்தில் உள்ளது.[3]

போக்குவரத்து

[தொகு]

தர்பத் பன்னாட்டு வானூர்தி நிலையம், குவாடர், கராச்சி, சார்ஜா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நகரங்களை இணைக்கிறது. நெடுஞ்சாலைகள் குவாடர், சபஹார், ஈரான் சஹர், கலாத், குவெட்டா, கராச்சி போன்ற நகரங்களுடன் இணைக்கிறது. சீனா–பாக்கித்தான் பொருளாதார பாதை தர்பத் நகரத்தை பாகிஸ்தானின் முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது. [4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Balochistān (Pakistan): Province, Major Cities, Municipalites & Towns - Population Statistics, Maps, Charts, Weather and Web Information". www.citypopulation.de.
  2. Tehsils & Unions in the District of Kech/Turbat - Government of Pakistan பரணிடப்பட்டது 2012-08-05 at Archive.today
  3. Livingston, Ian (June 18, 2019). "Recent scorching temperatures in Kuwait and Pakistan confirmed as third and fourth hottest on Earth". The Washington Post. https://www.washingtonpost.com/weather/2019/06/18/recent-scorching-temperatures-kuwait-pakistan-confirmed-third-fourth-hottest-measured-earth. 
  4. "CPEC - Gwadar Turbat Hoshab".
"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்பத்&oldid=4272346" இலிருந்து மீள்விக்கப்பட்டது