உள்ளடக்கத்துக்குச் செல்

தர்ஜனி மன்முக்ரம் வக்கீல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தர்ஜனி மன்முக்ரம் வக்கீல், இந்தியாவைச் சேர்ந்த வங்கியாளரும்,வணிக நிர்வாகியுமாவார். [1]1993 ஆம் ஆண்டில் எக்சிம் வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து ஆசியாவில் ஒரு வங்கி/நிதி நிறுவனத்திற்கு தலைமை தாங்கிய முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார்.[2][3]

மும்பை பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள இவர், மகாராஷ்டிரா மாநில நிதி ஆணையத்தில் 1958 ஆம் ஆண்டில், ஒரு எழுத்தராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். 1965 ஆம் ஆண்டில், இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கியின் முதன்முதல் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட நாற்பது பேர் கொண்ட குழுவில் முதல் மற்றும் ஒரே பெண் அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.[4]

தர்ஜனி, தனது பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவதைக் கண்ட அப்போதைய இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சிறி அர்தேந்து பக்சியின் நம்பிக்கையைப் பெற்று, இந்தியாவின் எக்சிம் [5]வங்கியில் பணியில் சேர்ந்துள்ளார். தொடர்ந்து அதே வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக 1993 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். [6]


பாலின சமத்துவம் என்பது பெருநிறுவன வட்டாரங்களில் முக்கியமான வார்த்தையாக மாறுவதற்கு முன்பே,1990 களின் முற்பகுதியில் எக்சிம் வங்கியை ஒரு பெண் நிர்வகித்து வழிநடத்தியது குறிப்பிடத்தக்கது. அவர் தலைவராக இருந்த காலகட்டத்தில், அவ்வங்கி 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களைக் கொண்டிருந்தது.[7] 1996 ஆம் ஆண்டில் இவர், எக்சிம் வங்கிப் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

எக்சிம் வங்கி, தர்ஜனி வக்கீலை மட்டுமல்லாது, 2009 மற்றும் 2010 ஆண்டுகளில் திருமதி. ரவ்னீத் கவுர் கூடுதல் பொறுப்பாக தலைவராகவும், 2021 ஆம் ஆண்டில் திருமதி ஹர்ஷா பங்காரி அதன் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பொறுப்பேற்று [8]வெற்றிகரமாக நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

1997 ஆம் ஆண்டில், வணிகத்தில் "தன் தைரியத்தை நிரூபித்த" முதல் ஐம்பது பெண்களில் ஒருவராககேபீஎம்ஜி நிறுவனத்தால் உலகளாவிய வணிகத்தில் அங்கீகரிக்கப்பட்டார். மேலும் 2011 ஆம் ஆண்டில், அவர் "நினைவுகளின் மொசைக்", என்ற சுயசரிதை ஓவியத்தை (தனியார் புழக்கத்திற்கு மட்டும்) வரைந்து வெளியிட்டுள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Chakrabarti, Reeta (12 November 2013). "Women bankers break through in India". BBC News. https://www.bbc.com/news/business-24867346. 
  2. Chakrabarti, Reeta (12 November 2013). "Women bankers break through in India". BBC News. https://www.bbc.com/news/business-24867346. 
  3. Ghosh, Palash (26 February 2014). "Shattered Glass Ceiling: Indian Female Executives Thriving In Banking Industry, But Ordinary Women Need Greater Access To Loans". International Business Times. https://www.ibtimes.com/shattered-glass-ceiling-indian-female-executives-thriving-banking-industry-ordinary-1557871. "Tarjani Vakil was named chairwoman of the Exim Bank, thereby becoming the first woman to lead any large bank in India." 
  4. "The First Ladies' Club- Business News". www.businesstoday.in. பார்க்கப்பட்ட நாள் 2018-07-11.
  5. Katherine C. Zubko Ph.D.; Raj R. Sahay (16 September 2010). Inside the Indian Business Mind: A Tactical Guide for Managers: A Tactical Guide for Managers. ABC-CLIO. pp. 135–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-37830-0. பார்க்கப்பட்ட நாள் 14 February 2019.
  6. Ghosh, Palash (26 February 2014). "Shattered Glass Ceiling: Indian Female Executives Thriving In Banking Industry, But Ordinary Women Need Greater Access To Loans". International Business Times. https://www.ibtimes.com/shattered-glass-ceiling-indian-female-executives-thriving-banking-industry-ordinary-1557871. "Tarjani Vakil was named chairwoman of the Exim Bank, thereby becoming the first woman to lead any large bank in India." 
  7. Adler, Nancy J. (2015). "2. Women Leaders Shaping History in the 21st Century". In Ngunjiri, Faith Wambura; Madsen, Susan R. (eds.). Women as Global Leaders. IAP. p. 38. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781623969660. பார்க்கப்பட்ட நாள் 15 February 2019.
  8. Bureau, Our (2021-09-08). "Harsha Bangari takes charge as Exim Bank chief". www.thehindubusinessline.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-23.