தர்சுட்டன் அளவுகோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உளவியல் மற்றும் சமூகவியலில் தர்சுட்டன் மனப்பான்மை அளவுகோல் (Thurstone attitude scale) மனப்பான்மையை அளவிட முதன்மையான அளவுகோளாகக் கருதப்படுகிறது. இது 1928 ஆம் ஆண்டில் லூயிசு லியோன் தர்சுட்டன் என்பவரால் சமயம் மீதான அணுகுமுறைகளை அளவிடும் ஒரு வழிமுறையாக உருவாக்கப்பட்டது. இது ஒரு குறிப்பிட்ட சிக்கலைப் பற்றிய அறிக்கைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. ஒவ்வொரு அறிக்கையும் எவ்வளவு சாதகமானது அல்லது சாதகமற்றது என்று தீர்மானிப்பதற்காக ஒரு எண் மதிப்பைக் கொண்டுள்ளது, மக்கள் அவர்கள் ஒப்புக்கொண்ட ஒவ்வொரு அறிக்கையையும் சரிபார்த்து, சராசரி மதிப்பெண் கணக்கிடப்படுகிறது. இவ்வாய்வில் ஆம் - இல்லை ; அல்லது நன்று - சுமார் - மோசம் ; என்ற அளவில் வினா நிரல் அடிப்படையில் சோதித்தறியப்படுகிறது. இது அவர்களின் அணுகுமுறையை அல்லது மனப்பான்மையைக் குறிக்கிறது. ஆனால் ஒரு முழுமையான தர்ஸ்டன் அளவுகோலில் நேரிடை எண்ணம், எதிரிடை எண்ணம், இவற்றிற்கு இடைப்பட்ட பல்வேறு போக்குகள் கொண்ட மனநிலை ஆகியவற்றை பிரதிபலிக்கும் 40 அல்லது 50 உருப்படிகள் கொடுக்கப்பட்டிருக்கும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. மேற்கோள் நூல் : நாகராஜன் . கி . மற்றும் சீத்தாராமன் . உளவியல் நோக்கில் கற்றலும் , மனித மேம்பாடும் . ஸ்ரீ ராம் பதிப்பகம் . சென்னை- 93

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்சுட்டன்_அளவுகோல்&oldid=3457686" இருந்து மீள்விக்கப்பட்டது