உள்ளடக்கத்துக்குச் செல்

தர்சனா ஜாவேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தர்சனா ஜாவேரி
பிறப்புமும்பை
விருதுகள்சங்கீத நாடக அகாதமி கூட்டாளர்

நான்கு ஜாவேரி சகோதரிகளில் இளையவரான தர்சனா ஜாவேரி (Darshana Jhaveri ) (பிறப்பு: 1940), இந்திய பாரம்பரிய நடன வடிவமான மணிப்பூரி நடனத்தின் முன்னணி நிபுணராவார். [1] இவர் குரு பிபின் சிங்கின் சீடர் ஆவார். மேலும் 1958 ஆம் ஆண்டிலிருந்து தனது சகோதரிகளுடன் மேடையில் நிகழ்ச்சியைத் தொடங்கினார். [2] இந்தியாவில் மணிப்பூரி நடனத்தை பிரபலப்படுத்திய 1972 ஆம் ஆண்டில் மணிப்பூரி நர்தனாலயாவின் நிறுவனர்களில் ஒருவரான இவர், தற்போது மும்பை, கொல்கத்தா மற்றும் இம்பால் ஆகிய மையங்களுடன் மையமாக உள்ளார். [3] [4]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பயிற்சி

[தொகு]

ஜாவேரி மும்பையில் ஒரு குசராத்தி குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். தனது ஆறு வயதில், தனது மூத்த சகோதரிகளான நயனா மற்றும் ரஞ்சனா ஆகியோரின் நடனங்களைப் பார்த்து வளர்ந்தார். பின்னர், இவர் குரு பிபின் சிங்கிடமிருந்து மணிப்பூரி நடனத்தைக் கற்றுக் கொண்டார். விரைவில், இவரும் தனது சகோதரி சுவர்னாவுடன் சேர்ந்து நடன வடிவத்தைக் கற்கத் தொடங்கினார். [1] [5] பின்னர், அவர் பாரம்பரிய இராசலீலா நடனங்களை சேத்ரிதோம்பி தேவியிடமிருந்தும், நேதா பங் குரு மெய்டி டோம்பா சிங்கிடமிருந்தும், பாரம்பரிய மைபி ஜாகோய் குமார் மைபியிடமிருந்தும் கற்றுக்கொண்டார்.

தொழில்

[தொகு]

1950களில், ஜாவேரி சகோதரிகள்  – நயனா, ரஞ்சனா, சுவர்னா, தர்சனா  – இந்தியாவிலும் வெளிநாட்டிலும் மேடையில் ஒன்றாக நிகழ்ச்சி நடத்தத் தொடங்கியிருந்தனர். 1956ஆம் ஆண்டில், இம்பாலின் அரச அரண்மனைக்குள் கோவிந்த்ஜி கோவிலில் தங்கள் நடனங்களை நிகழ்த்திய முதல் மணிப்பூரி அல்லாதவர்கள் இவர்களேயாவர். இறுதியில், சகோதரிகள் 1972ஆம் ஆண்டில் மும்பை, கொல்கத்தா மற்றும் இம்பால் ஆகிய இடங்களில் தங்கள் குரு மற்றும் கலாவதி தேவியுடன் மணிப்பூரி நர்தனாலயாவை நிறுவினர். [6] காலப்போக்கில் இவர்களின் பெயர் மணிப்பூரி நடனத்திற்கு ஒத்ததாக மாறியது. [7] பல ஆண்டுகளாக, தர்சனா நடனத்தைப் பற்றி பல புத்தகங்களையும் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளதுடன், தனது குருவுக்கு தனது வாழ்நாளில், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் நடனக் கலை ஆகியவற்றில் உதவி செய்துள்ளார். [8]

ஒரு பிரபல நடன விமர்சகரான சுனில் கோத்தாரி என்பவர் 2008ஆம் ஆண்டு எழுதிய கட்டுரையில், "மணிப்பூரி நடனத்தின் கோயில் பாரம்பரியத்தை நகரங்களுக்கு கொண்டு வருவதற்கு இவர்கள் பொறுப்பு" என்று எழுதினார். இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் நயனா இறந்துவிட்டார் என்றும், சுவர்னா உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், ரஞ்சனாவும் தர்சனாவும் தனது நடன குழுவுடன் தொடர்ந்து நிகழ்ச்சிகளை நிகழ்த்தியும், மணிப்பூரி நடனத்தை கற்பித்தும் வருகிறார்கள் என்றும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. [9] [10]

கடந்த 50 ஆண்டுகளாக இவர் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் தனிப்பட்ட முறையில் மற்றும் அரசாங்க கலாச்சார பிரதிநிதிகளின் கீழ் விரிவாக சுற்றுப்பயணம் செய்துள்ளார். மணிப்பூரி நர்தனாலயா (மும்பை, கொல்கத்தா மற்றும் மணிப்பூர்) தவிர, பாட்கண்டே சங்கத் வித்யாபீடம் (லக்னோ), பாரதிய நிருத்ய கலா மந்திர் (பாட்னா), பனஸ்தாலி வித்யாபீடம் (ராஜஸ்தான்) போன்றவற்றிலும் தனது பங்களிப்பை அளித்துள்ளார். [11]

விருதுகள் மற்றும் கௌரவங்கள்

[தொகு]

இந்தியாவின் நடனம், இசை மற்றும் நாடகத்திற்கான தேசிய அகாடமியான சங்கீத நாடகக அகாதமி 1996ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதமி விருதை தர்சனா ஜாவேரிக்கு வழங்கியது. [12] மணிப்புரி நடனத்தில் இவரது பங்களிப்பிற்காக இந்திய அரசு 2002இல் இவருக்கு பத்மசிறீ விருதினை வழங்கி கௌரவித்தது. [13] இவருக்கு 2018இல் காளிதாஸ் சம்மன் விருதும் வழங்கப்பட்டது.

மேற்கொள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Ajith Kumar, P.K. (2 March 2007). "Dancer's mission". தி இந்து இம் மூலத்தில் இருந்து 19 மார்ச் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070319161624/http://www.hindu.com/fr/2007/03/02/stories/2007030201000300.htm. பார்த்த நாள்: 29 March 2010. 
  2. "Subtle expressions: Darshana Jhaveri enthralled the audience with her Manipuri dance recital.". The Hindu. 16 February 2007 இம் மூலத்தில் இருந்து 13 ஜனவரி 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080113202352/http://www.hindu.com/thehindu/fr/2007/02/16/stories/2007021600810300.htm. பார்த்த நாள்: 31 March 2010. 
  3. "Illuminating show on dance choreography: It was a happy confluence of teachers and disciples as Sri Shanmukhananda Sabha, Mumbai, celebrated its Golden Jubilee.". The Hindu. 21 November 2003 இம் மூலத்தில் இருந்து 12 ஏப்ரல் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100412052302/http://www.hinduonnet.com/thehindu/fr/2003/11/21/stories/2003112101220400.htm. பார்த்த நாள்: 31 March 2010. 
  4. Doshi, p. 43
  5. "Learn a traditional art form: Darshana Jhaveri". 29 Jan 2010 இம் மூலத்தில் இருந்து 11 ஆகஸ்ட் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110811054601/http://articles.timesofindia.indiatimes.com/2010-01-29/pune/28127729_1_manipuri-dance-traditional-art-dance-form. பார்த்த நாள்: 31 March 2010. 
  6. Singha, p. 177
  7. "Sisters in sync". India Today. 13 February 2008. பார்க்கப்பட்ட நாள் 31 March 2010.
  8. Darshana Jhaveri
  9. "DANCING QUEENS". India Today. 16 January 2008. http://indiatoday.intoday.in/site/Story/3604/Simply%20Kolkata/Renewed+splendour.html. பார்த்த நாள்: 31 March 2010. 
  10. "Dance Listings: DOWNTOWN DANCE FESTIVAL". New York Times. 24 August 2007. https://www.nytimes.com/2007/08/24/arts/dance/24dance.html?pagewanted=print. பார்த்த நாள்: 31 March 2010. 
  11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-02-29. பார்க்கப்பட்ட நாள் 2020-03-09.
  12. Dance Manipuri awardees பரணிடப்பட்டது 2018-09-05 at the வந்தவழி இயந்திரம் Sangeet Natak Akademi website
  13. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.

குறிப்புகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்சனா_ஜாவேரி&oldid=3585106" இலிருந்து மீள்விக்கப்பட்டது