உள்ளடக்கத்துக்குச் செல்

தர்சனா குப்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தர்சனா குப்தா
Darshana Gupta
2019 ஆம் ஆண்டில்
பிறப்பு20 ஆம் நூற்றாண்டு
தேசியம்இந்தியா
பணிசெயலர்
அறியப்படுவதுதிருமண முகாம்கள் எற்பாடு செய்தல்
வாழ்க்கைத்
துணை
அஜய் குப்தா
உறவினர்கள்பனார்சிதாசு குப்தா (மாமனார்)

தர்சனா குப்தா (Darshana Gupta) இந்தியாவின் அரியானா மாநிலம் பரிதாபாத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஆவார். திருமண முகாம்களை ஏற்பாடு செய்வதில் பிரபலமானவராக அறியப்படுகிறார். பனார்சி தாசு குப்தா அறக்கட்டளையின் செயலாளராக உள்ளார். 2019 ஆம் ஆண்டில், பன்னாட்டு மகளிர் தினத்தன்று இந்தியக் குடியரசுத் தலைவரால் தர்சனாவுக்கு நாரி சக்தி விருது வழங்கப்பட்டது. இதுவரை 3,500 இணைகளுக்கு திருமணங்களை ஏற்பாடு செய்துள்ளார். இம்முயற்சி இல்லாவிட்டால் அவர்கள் ஒரு பாரம்பரிய பிரமாண்டமான திருமணத்தையும் வரதட்சணை கொடுக்க முடியாமல் திருமணமின்றி தனிமையில் இருந்திருக்கலாம்.

பனார்சி தாசு குப்தாவின் மகனான அஜய் குப்தாவை இவர் மணந்தார். [1] பனார்சி தாசு குப்தா [2] 90 வயதில் இறந்தார்.

இதே ஆண்டு பனார்சி தாசு குப்தா அறக்கட்டளை உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. [3] தர்சனா குப்தாவும் அவரது கணவரும் சேர்ந்து இதை நிறுவினர். அறக்கட்டளை பரிதாபாத்தில் பதிவுசெய்யப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். அஜய் குப்தா தலைவராகவும், தர்சனா குப்தா செயலாளராகவும் பொறுப்பேற்றனர். [4]

தர்சனா குப்தாவுக்கு சனாதிபதியினால் நாரி சக்தி விருது வழங்கப்பட்டது

இந்தியாவில் பாரம்பரியமாக விலையுயர்ந்த ஏற்பாடுகள் மற்றும் வரதட்சணை பரிமாற்றம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பெரிய சிக்கலாக இருக்கும் திருமண பிரச்சனையை இந்த அறக்கட்டளை நிவர்த்தி செய்து வருகிறது. இந்த மரபுகள் பலருக்கு ஒரு துணை வேண்டும் என்ற ஆசை இருந்தபோதிலும் திருமணம் செய்து கொள்ள இயலாமல் இருந்தனர். இந்த அறக்கட்டளை நூற்றுக்கணக்கான திருமணங்களை ஏற்பாடு செய்துள்ளது. பஞ்ச்குலாவில் 250 பேருடன் நடைபெற்ற ஆரம்ப முகாம் மிகவும் வெற்றிகரமாக இருந்தது, ஒவ்வொரு சோடிக்கும் $11,000 மானியமாக வழங்க பிராந்திய அரசாங்கம் முடிவு செய்தது.

குப்தா அகில இந்திய வைசு கூட்டமைப்பின் நிர்வாக உறுப்பினராகவும் உள்ளார். [5]

2019 ஆம் ஆண்டு இவருக்கு நாரி சக்தி விருது வழங்கப்பட்டபோது இவரது பணி அங்கீகரிக்கப்பட்டது. [6] பன்னாட்டு மகளிர் தினத்தன்று இந்திய குடியரசுத்தலைவரால் இவ்விருது தர்சனாவுக்கு வழங்கப்பட்டது. இனம், மதம் அல்லது நிறத்தைப் பொருட்படுத்தாமல் 3,500 திருமணங்களை இவர் தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஏற்பாடு செய்ததாக மேற்கோள் குறிப்பிட்டது. ஆடம்பரமான திருமணத்தை நடத்தாமல் சேமிக்கும் பணம் பெண்களின் கல்வி அல்லது பயிற்சிக்கு உதவும் என்ற நோக்கத்துடன் செயல்படுவதாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Darshana Gupta 'Nari Shakti' from Bhiwani Haryana - YouTube". www.youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2021-01-06.
  2. "The Tribune, Chandigarh, India - Haryana". www.tribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2021-01-06.
  3. Staff (2007-08-20). "Aggarwal Samaj forms Sh Banarsi Dass Gupta Foundation". www.oneindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-06.
  4. "BANARSI DASS GUPTA FOUNDATION NGO in Faridabad Haryana Address Contact details". Indian NGO list directory Database (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-01-10. பார்க்கப்பட்ட நாள் 2021-01-06.
  5. "International Vaish Federation (IVF) | Home". www.vaishivf.com. பார்க்கப்பட்ட நாள் 2021-01-06.
  6. "Nari Shakti Puraskar - Gallery". narishaktipuraskar.wcd.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-01-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்சனா_குப்தா&oldid=3539298" இலிருந்து மீள்விக்கப்பட்டது