கரும்புலிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தரைக் கரும்புலிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கரும்புலிகளின் படத்தொகுப்பு, இடது பக்க மேல் மூலையில் இருப்பது கொலின், முதல் கடற்கரும்புலித் தற்கொலை போராளி

கரும்புலிகள், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு சிறப்புத் தாக்குதல் படையணியாகும். இது தமது இலக்கை நிறைவு செய்ய தற்கொலைத் தாக்குதலில் ஈடுபடத் துணியும் படையணியாகும். இவர்கள், உலகில் பயங்கரமானதும் கட்டுப்பாடு மிக்கதுமான தற்கொலை படையணியாக விளங்கினார்கள். 1987 ஜூலை 5 முதல் 2007 ஜூன் 27 வரை 322 கரும்புலிகள் கடலிலும் தரையிலும் நடைபெற்ற சமர்களிலும் வேறு தாக்குதல்களிலும் மரணமடைந்துள்ளனர். இவர்களில் 81 பேர் தரைக்கரும்புலிகளும் 241 பேர் கடற்கரும்புலிகளும் ஆவர்.[1] பெரும்பாலானோர் இலங்கையில் எல்லைக்குள் மரணமடைந்தனர். இலங்கை குடியரசுத் தலைவர் ரணசிங்க பிரேமதாசா கரும்புலிகளின் தாக்குதலில் இறந்தவரெனக் கருதப்படுகின்றது.

கரும்புலிகளின் படைப்பிரிவுகள்[தொகு]

  • தரைக் கரும்புலிகள்
  • கடற் கரும்புலிகள்
  • வான் கரும்புலிகள்
  • மறைமுகக் கரும்புலிகள்

தரைக் கரும்புலிகள்[தொகு]

மில்லர்

முதல் தரைக் கரும்புலித் தாக்குதலை 1987]] யூலை மாதம், 5ம் திகதி இலங்கை இராணுவத்திற்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொலைப் போராளியான கரும்புலி கப்டன் மில்லர் தற்கொலைத் தாக்குதலாக நடத்தினார். கப்டன் மில்லரினால் வடமராட்சி நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இராணுவமுகாமின் மீதே நடாத்தப்பட்டது. இத் தாக்குலைத் தொடர்ந்து ஒப்ரேசன் லிபரேசன் எனும் இலங்கை இராணுவ நடவடிக்கை முடக்கப்பட்டது.

கப்டன் மில்லர் ([[ஜனவரி 1, 1966ஜூலை 5, 1987; கரவெட்டி, யாழ்ப்பாணம்) எனும் இயக்கப்பெயர் கொண்ட வல்லிபுரம் வசந்தன் தமிழீழ விடுதலைப் புலிகளில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர்.

மறைமுகக் கரும்புலிகள்[தொகு]

மறைமுகக் கரும்புலிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு சிறப்புத் தாக்குதல் படையணியைச் சேர்ந்தவர்கள். போராட்டத்தின் முக்கியமான காலகட்டங்களில் தடைநீக்கிகளாகச் செயற்பட்டு மடிந்தவர்கள். தம் சுயத்தையே அழிக்கும் மனத்திடமும் விருப்பமும் கொண்டவர்கள். தற்கொடைத்தாக்குதலை நடத்துபவர்கள் கரும்புலிகள் என்ற பெயரால் அழைக்கப்படுவர். வீரச்சாவடையும் கரும்புலிகளுக்கு இராணுவநிலையோடு அவர்களின் சாவு அறிவிக்கப்படும். வித்துடல் இருந்தால் அதற்குரிய மரியாதையோடு விதைக்கப்படும். உடல் இல்லையென்றால் நினைவுக்கல் நாட்டப்படும். நினைவுநாட்களில் அவர்களின் பெயர், அடையாளங்கள் என்பன வெளிப்படுத்தப்பட்டு உரிய மரியாதையும், கெளரவமும் வழங்கப்பட்டு கல்லறையிலோ, நினைவுக்கல்லிலோ நினைவுகூரப்படுவர். ஆனால் இவையெதுவும் கிடைக்காமலும் பலர் போராட்டத்துக்காக உயிரை அர்ப்பணிக்கின்றனர். தற்கொடைத் தாக்குதலைச் செய்கின்றனர். இவர்களின் பெயர்களோ தகவல்களோ வெளிவிடப்பட மாட்டாது. எப்போதாவது எதிரி தன் விசாரணையில் சம்பந்தப்பட்டவரின் அடையாளங்களை உறுதிப்படுத்தினாலொழிய இவர்கள் பற்றிய தரவுகள் வெளியில் வராது. கல்லறைகளோ, நினைவுக்கற்களோ இவர்களுக்காக இருக்காது. மாவீரர் பட்டியலில் இவர்களின் பெயர்கள் இடம்பெறமாட்டாது. சம்பந்தப்பட்ட சிலருடன் மட்டும் உறங்கிப்போகும் உண்மைகள் இவர்கள். இவர்களே 'மறைமுகக் கரும்புலிகள்'.

வேர்கள் வெளியினில் தெரிவதில்லை - சில

வேங்கைகள் முகவரி அறிவதில்லை
பெயர்களைச் சொல்லவும் முடிவதில்லை - கரும்

புலிகளின் கல்லறை வெளியில் இல்லை. புதுவை இரத்தினதுரை

மேலும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரும்புலிகள்&oldid=1901535" இருந்து மீள்விக்கப்பட்டது