தருமபுரி பேருந்து எரிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அ தி மு க பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் வழக்கில் குற்றத்தை உறுதி செய்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து அக்கட்சித் தொண்டர்கள் 2000ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி நடத்திய ஓர் ஆர்ப்பாட்டத்தின்போது, 45 மாணவ மாணவிகள், இரண்டு ஆசிரியர்கள் சென்றுகொண்டிருந்த பேருந்து ஆர்ப்பாட்டக்காரர்களால் தீவைக்கப்பட்டது.

இச்சம்பவத்தில் கோயமுத்தூரில் உள்ள தமிழக வேளாண் பல்கலைக்கழக மாணவிகளான கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகியோர் உயிரிழந்தனர்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு[தொகு]

முக்கியக் குற்றவாளிகளுக்கு கீழ் நீதிமன்றம் வழங்கியிருந்த மரண தண்டனைத் தீர்ப்பை 2007 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உறுதிசெய்திருந்தது. நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் பி.எஸ்.சௌஹான் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் 2010ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத் தீர்ப்பை மேன்முறையீட்டில் உறுதி செய்திசெய்தது.

இந்த வழக்கில் வேறு இருபத்து ஐந்து பேருக்கு 2 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரையிலான சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

அரசியல் சாசன அமர்வு[தொகு]

தூக்குத்தண்டனை குற்றவாளிகள் 3 பேரும் தங்களது மனுவை 2 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரித்தது ஏற்புடையதல்ல என்றும், எனவே தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை குறைக்கக்கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். தாக்கல் செய்த மனுவை, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.[1] [2][3]


பரவலர் ஊடகங்களில்[தொகு]

கல்லூரி எனும் தமிழ்த் திரைப்படத்தில் இச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட காட்சி இடம் பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]