தருமசேது
| தருமசேது Dharmasetu Sri Maharaja Dharmasetu | |||||
|---|---|---|---|---|---|
| சிறீவிஜயம்–மாதரம் அரசர் | |||||
| ஆட்சிக்காலம் | 728 - 746 | ||||
| முன்னையவர் | ராக்காய் பனங்கரன் | ||||
| பின்னையவர் | தரணிந்திரன் (Dharanindra) | ||||
| |||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தருமசேது அல்லது மகாராஜா தருமசேது (ஆங்கிலம்: Dharmasetu அல்லது Sri Dharmasetu; இந்தோனேசியம்: Sri Maharaja Sri Dharmasetu) என்பவர் 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிறீ விஜயப் பேரரசின் அரசர் ஆவார்.
அவரின் ஆட்சியின் கீழ், கி.பி 775-இல், மலாய் தீபகற்பத்தின் வடக்கே இருந்த பான் பான் இராச்சியத்தை, சிறீ விஜயப் பேரரசின் மண்டலத்திற்குள் வெற்றிகரமாக இணைத்தார்.
வரலாறு
[தொகு]தாய்லாந்தில் இருந்த நக்கோன் சி தாமராட் (Nakhon Si Thammarat) மாநிலத்தில் ஒரு பழைய மடாலயத்தில், அவலோகிதர், வச்ரபானி, கௌதம புத்தர் ஆகிய மூவருக்கும் மூன்று சரணாலயங்களைக் கட்ட தர்மசேது உத்தரவிட்டதைக் குறிக்கும் லீகோர் கல்வெட்டு (Ligor inscription) கிடைத்து உள்ளது.[1]:130–131
மேலும், ஜாவாவை ஆட்சி செய்த சைலேந்திர வம்சத்தின் தலைவராக தர்மசேது இருந்ததாக லீகோர் கல்வெட்டு கூறுகிறது. சிறீ விஜயப் பேரரசிற்கும் சைலேந்திரர்களுக்கும் இடையே உறவுகள் இருந்ததாக அறியப்படும் முதல் நிகழ்வு இதுவே ஆகும்.[1]:221–223
தர்மசேதுவின் மகள் தேவி தாரா
[தொகு]தர்மசேதுவின் மகள் தேவி தாரா (Dewi Tara), பின்னர் சைலேந்திர வம்சத்தைச் சேர்ந்த சமரதுங்கா (Samaratungga) என்பவரை மணந்தார். பின்னர் 792-ஆம் ஆண்டு வாக்கில் சமரதுங்கா, சிறீ விஜயத்தின் அரியணையை ஏற்றுக்கொண்டார்.[1]:175, 143–145
சிறீ விஜயத்திற்கும் சைலேந்திரர்களுக்கும் இடையிலான உறவு அதன் பின்னர் மிகவும் நெருக்கமாகியது. தர்மசேதுவிற்குப் பிறகு, அவரின் மருமகன் சமரகரவீரன் 782-ஆம் ஆண்டு சிறீ விஜயத்தின் அரசராக அரியணை ஏறினார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Munoz, Paul Michel (2006). Early Kingdoms of the Indonesian Archipelago and the Malay Peninsula. Singapore: Editions Didier Millet. ISBN 981-4155-67-5.