தருண் போஸ்
தருண் போஸ் | |
|---|---|
| பிறப்பு | 28 செப்டம்பர் 1928 கொல்கத்தா, இந்தியா |
| இறப்பு | 8 மார்ச்சு 1972 (அகவை 43) கொல்கத்தா, இந்தியா |
| பணி | நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 1957–1972 |
தருண் போஸ் (28 செப்டம்பர் 1928 – 8 மார்ச்சு 1972) என்பது ஓர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் பெரும்பாலும் இந்தி திரைப்படங்களில் 1960 மற்றும் 1970களில் நடித்தார்.
ஆரம்ப வாழ்க்கை
[தொகு]தருண் போஸ் கொல்கத்தாவில் பிறந்தார். பின்னர் நாக்பூரில் வளர்ந்தார். இவர் செயின்ட் பிரான்சிஸ் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். இளமையிலேயே நாடகங்களில் நடித்த இவர், 15 வயதில் ஆல் இந்தியா ரேடியோ நாக்பூரில் தேர்வு செய்யப்பட்டு வானொலி நாடகங்களில் பணியாற்றினார்.
திரைப்பட வாழ்க்கை
[தொகு]குடும்ப அழுத்தம் இல்லாமல் நடிப்பை தொடர்வதற்காக தபால் மற்றும் தந்தித் துறையில் பணியாற்றினார்.[1] 1957ஆம் ஆண்டு அசித் சென் இயக்கிய குற்றவாளி யார்? திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் பிமல் ராய் இயக்கிய சுஜாதா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பாராட்டைப் பெற்றார்.[2] இவர்கும்னாம், பந்தினி, அனுபமா, தேவர், முஜே ஜீனே தோ, ஆன் மிலோ சஜ்னா போன்ற திரைப்படங்களில் நடித்தார். மருத்துவர், நீதிபதி, வழக்கறிஞர் போன்ற நடுத்தர வர்க்க கதாபாத்திரங்களில் நடித்ததற்காக அறியப்பட்டார். 1957 முதல் 1972 வரை சுமார் 41 திரைப்படங்களில் நடித்தார். 8 மார்ச்சு 1972 அன்று காலமானார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tarun Bose Biography". memsaabstory.com. 23 July 2010. Retrieved 27 May 2013.
- ↑ Khageśa Debabarmana (2013). S.D. Burman: The World of His Music. Rupa Publications India. pp. 1959–. ISBN 978-81-291-2063-2. Retrieved 27 January 2015.
- ↑ "Tarun Bose (Part 5): Favourite directors". memsaabstory.com. 24 August 2010. Retrieved 27 May 2013.