தராவெரா சிகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தராவெரா சிகரம்
Okataina.jpg
1886 தராவெரா எரிமலை வெடிப்பு
உயர்ந்த இடம்
உயரம்1,111 m (3,645 ft)
ஆள்கூறு38°13′00″S 176°31′00″E / 38.21667°S 176.51667°E / -38.21667; 176.51667ஆள்கூறுகள்: 38°13′00″S 176°31′00″E / 38.21667°S 176.51667°E / -38.21667; 176.51667
புவியியல்
தராவெரா சிகரம் is located in North Island
தராவெரா சிகரம்
தராவெரா சிகரம்
வடக்கு தீவு, நியூசிலாந்து
நிலவியல்
கடைசி வெடிப்புமே 1981 (வைமாங்கு)
ஜூன் 1951 (ரோட்டோமாஹானா)
ஜூன் முதல் ஆகத்து வரை 1886 (தராவெரா)

தராவெரா சிகரம் நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவில் உள்ள ஓர் எரிமலை ஆகும். இது இந்நாட்டில் நடந்த மிகப்பெரிய எரிமலை வெடிப்புக்கு காரணமான சிகரம் ஆகும்.[1] 1886ல் இந்த சிகரத்தில் நடந்த எரிமலை வெடிப்பில் சிக்கி 120 மக்கள் கொல்லப்பட்டனர். [2]

தராவெரா எரிமலையின் முக்கிய டோம்கள் ரூவாஹியா டோம் (1111 மீட்டர்), தராவெரா டோம் மற்றும் வாஹாங்கா டோம் ஆகியவையாகும். இச்சிகரத்திற்கு அருகே பல ஏரிகள் உள்ளன. தராவெரா நதி இம்மலையின் வட-கிழக்கு திசையில் ஓடுகிறது.

சிர்கா 1315 எரிமலை வெடிப்பு[தொகு]

தராவெரா சிகரத்தில் 1315 ஆம் ஆண்டு எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. இந்த நிகழ்விலிருந்து எறியப்பட்ட சாம்பல் உலகெங்கிலும் உள்ள வெப்பநிலையை பாதித்தது. இதுவே ஐரோப்பாவில் நடந்த 1315-17 ன் பெரும் பஞ்சத்திற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. [3] [4] [5]

1886 எரிமலை வெடிப்பு[தொகு]

இந்த எரிமலை வெடிப்பு தான் நியூசிலாந்து நாட்டின் மிகப்பெரிய எரிமலை வெடிப்பு மற்றும் அதிக மக்களைக் கொன்ற வெடிப்பு ஆகும். இந்த வெடிப்பில் 120 மக்கள் கொல்லப்பட்டனர்.[2]

குறிப்புகள்[தொகு]

  1. https://www.wired.com/2011/02/the-1886-eruption-of-mt-tarawera-new-zealand/
  2. 2.0 2.1 Aftermath – Death list Archived 2008-06-04 at the வந்தவழி இயந்திரம்., Anheizen.com. Accessed 20 March 2009.
  3. Cantor, Norman L. (2001). In the wake of the plague: the Black Death and the world it made. New York: Free Press. பக். 74. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-684-85735-0. 
  4. Nairn I.A. (2004). Rhyolite magma processes of the ~AD 1315 Kaharoa eruption episode, Tarawera volcano, New Zealand. 
  5. Hodgson K.A.. The c. AD 1315 syn-eruption and AD 1904 post-eruption breakout floods from Lake Tarawera, Haroharo caldera, North Island, New Zealand. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தராவெரா_சிகரம்&oldid=2760270" இருந்து மீள்விக்கப்பட்டது