உள்ளடக்கத்துக்குச் செல்

தரவளவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தரவளவியல் (Qualimetry) என்பது ஒரு விஞ்ஞான துறையாகும். ஒரு பொருள் அல்லது செயல்முறை அது இயற்கையானதோ அல்லது மனிதத் தயாரிப்போ, உழைப்பால் உருவானதோ அல்லது இயற்கையின் தயாரிப்போ, வாழ்வதோ அல்லது உயிரற்றதோ, எந்தவொரு பொருளாக இருந்தாலும் அதன் தரத்துடன் தொடர்புடைய முறைகள் மற்றும் பிரச்சினைகளை இத்துறை ஆய்வு செய்கிறது [1]. தரங்களின் அளவுகளை உறுதிப்படுத்தும் இந்த அறிவியல் கோட்பாடு முன்னாள் உருசியாவில் கி.கி.அசுகால்டோவால் உருவாக்கப்பட்டது [2]. தற்பொழுது உருசிய தரநிலைகளை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகிறது [3] .

கலந்துரையாடல்கள்

[தொகு]

தரவளவியல் என்ற சொல் quale (என்ன வகை என்ற பொருள் கொண்டது) என்ற இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். எந்தவொரு வகையான பொருளின் தரத்துடன் தொடர்புடைய முறைகள் மற்றும் பிரச்சினைகளை ஆராயும் இவ்விஞ்ஞாசானத்துறை முதன்முதலில் 1968 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்டது. இந்த முன்னெடுப்பானது சர்வதேச அறிஞர்களின் மாசுகோ, ஓசுலோ, வர்னா, யெரெவான், மாட்ரிட்டு, தாலின் மாநாடுகளில் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தரவளவியல் பிரச்சினைகள் குறித்த விவாதங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. பல நாடுகளின் விஞ்ஞான மற்றும் பொறியியல் சொற்களஞ்சியங்களில் படிப்படியாக தரவளவியல் என்ற சொல் படிப்படியாக அனுமதிக்கப்பட்டது. கூகுள் நிறுவனத்தின் கூற்றுப்படி பல்லாயிரக்கணக்கான குறிப்புக்கள் மற்றும் வெளியீடுகள் 32 மொழிகளில் இந்த தரவளவியல் என்ற சொல் காணப்படுகிறது [4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Azgaldov, G. G. (1982), Theory and Practice of Product Quality Assessment: Fundamentals of Qualimetry, Ekonomika, Moscow (in Russian).
  2. Azgaldov, G.G. (1981), "Development of the theoretical basis of qualimetry", doctoral dissertation, Kuibyshev Military Engineering Academy, Moscow (in Russian).
  3. Product Quality (1979), Product Quality: Terms and Definitions. - GOST 15467 – 79.
  4. Azgaldov, G.G. and Kostin, A.V. (2011), "Applied Qualimetry: its Origins, Errors and Misconceptions", Benchmarking: An International Journal, Vol. 18 Iss: 3, pp.428 – 444.

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தரவளவியல்&oldid=2484111" இலிருந்து மீள்விக்கப்பட்டது