உள்ளடக்கத்துக்குச் செல்

தரம்வீர் பாரதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தரம்வீர் பாரதி
பிறப்பு25 திசம்பர் 1926
பிரயாக்ராஜ்
இறப்பு4 செப்டெம்பர் 1997 (அகவை 70)
பணிகவிஞர், கல்வியாளர்
சிறப்புப் பணிகள்Andha Yug

தரம்வீர் பாரதி (Dharamvir Bharati) (டிசம்பர் 25, 1926 - செப்டம்பர் 4, 1997) ஒரு புகழ்பெற்ற இந்தி கவிஞரும், எழுத்தாரும், நாடக ஆசிரியரும் மற்றும் இந்தியாவின் சமூக சிந்தனையாளரும் ஆவார். அவர், 1960 முதல் 1987 வரை பிரபலமான இந்தி வார இதழான தர்மயுக் [1] இன் தலைமை ஆசிரியராக இருந்தார். [2]

1972 ஆம் ஆண்டில் இந்திய அரசால் தரம்வீர் பாரதிக்கு இலக்கியத்திற்கான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அவரது குனா கோ கா தேவ்தா புதினம் மிகச் சிறப்புடையதாகும். பாரதியின் சூரஜ் கா சத்வான் கோடா புதினம், கதை சொல்லலில் ஒரு தனித்துவமான பரிசோதனையாகக் கருதப்படுகிறது. மேலும் இது 1992 ஆம் ஆண்டில் சியாம் பெனகல் அதே பெயரில் ஒரு தேசிய திரைப்பட விருது வென்ற திரைப்படமாக உருவாக்கப்பட்டது. மகாபாரதப் போருக்குப் பிறகு உடனடியாக அமைக்கப்பட்ட ஒரு நாடகம் அந்தா யுக் என்பதாகும். இது புகழ் பெற்ற ஒரு நாடகமாக கருதப்படுகிறது. இது நாடகக் குழுக்களால் அடிக்கடி நிகழ்த்தப்படுகிறது.

1988 ஆம் ஆண்டில், இந்தியாவின் தேசிய இசை, நடனம் மற்றும் நாடக அகாதமியான சங்கீத நாடக அகாதமி வழங்கிய சங்கீத நாடக அகாதமி விருது அவருடைய இந்தி மொழி நாடகத்திற்காக, அவருக்கு வழங்கப்பட்டது. [3]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

தரம்வீர் பாரதி 1926 டிசம்பர் 25 அன்று அலகாபாத்தின் கயஸ்தா குடும்பத்தில் சிரஞ்சி லால் மற்றும் சந்தா தேவி ஆகியோருக்கு பிறந்தார். அவரது தந்தை, இறந்த பின்னர் குடும்பம் கணிசமான நிதி நெருக்கடிகளை சந்தித்தது. அவருக்கு டாக்டர் வீர்பாலா என்ற சகோதரி இருந்தார்.

அவர் 1946 இல் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றார். [4] இந்தியில் அதிக மதிப்பெண்கள் பெற்றதற்காக "சிந்தாமணி கோஷ் விருதை" வென்றார்.

இந்த காலகட்டத்தில் அபுதயா மற்றும் சங்கம் பத்திரிகைகளுக்கு துணை ஆசிரியராக தரம்வீர் பாரதி இருந்தார். "சித்தா சாகித்யா" என்ற தலைப்பில் டாக்டர் திரேந்திர வர்மாவின் கீழ் 1954 இல் பி.எச்.டி. முடித்த அவர் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இந்தியில் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். 1950 கள் பாரதியின் வாழ்க்கையில் மிகவும் ஆக்கபூர்வமான காலமாக இருந்தது. இந்த காலகட்டத்தில் பல புதினங்கள், நாடகங்கள், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் விமர்சனப் படைப்புகளை எழுதினார்.

பத்திரிகை (மும்பை)

[தொகு]

1960 ஆம் ஆண்டில் டைம்ஸ் குழுமத்தின் பிரபலமான இந்தி வார இதழான தர்மயுக் பத்திரிகையின் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டு பம்பாய்க்கு சென்றார். 1987 வரை அதில் ஆசிரியராக இருந்தார். இந்த நீண்ட கால கட்டத்தின் போது இந்த பத்திரிகை நாட்டின் மிகவும் பிரபலமான இந்தி வார இதழாக மாறியது. மற்றும் இந்தி பத்திரிகையில் புதிய உயரங்களை எட்டியது. [4] ஒரு கள நிருபராக, வங்காளதேசம் விடுதலையின் விளைவாக ஏற்பட்ட இந்தோ-பாக்கிஸ்தான் போரை பாரதி தனிப்பட்ட முறையில் எழுதினார்.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

டாக்டர் பாரதி 1954 இல் காந்தா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவரை விவாகரத்து செய்தார். அவருக்கு பர்மிதா என்கிற ஒரு மகள் இருந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர் புஷ்பா என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இந்த மறுமணத்தின் மூலம் அவருக்கு ஒரு மகன் கின்சுக் பாரதி மற்றும் ஒரு மகள் பிரக்யா பாரதி ஆகியோர் உள்ளனர்.

பாரதி இதய நோயால் ஏற்பட்ட உடல்நலிவு காரணமாக 1997 இல் நோய்வாய்ப்பட்டு இறந்தார். [4]

முக்கிய படைப்புகள்

[தொகு]

புதினங்கள்

[தொகு]
  • குணஹோ கா தேவ்தா (1949)
  • சுராஜ் கா சத்வான் கோடா : 1952 இல் வெளியிடப்பட்ட இந்தப் புதினத்தில் இணைக்கப்பட்ட சிறு-விவரிப்புகளின் தொகுப்பாக, 20 ஆம் நூற்றாண்டின் இந்தி இலக்கியத்தில் வளர்சிதை மாற்றத்தின் முதன்மையான நிகழ்வுகளில் ஒன்றாக அழைக்கலாம். கதாநாயகன் மணிக் முல்லா என்ற இளைஞன், இந்த கதைகளை தனது நண்பர்களுக்கு விவரிக்கிறான். இந்த படைப்பின் பெயர் இந்து புராணங்களில் உள்ள ஒரு குறிப்பாகும். அதன்படி சூரிய-கடவுள் சூர்யனின் தேர் ஏழு குதிரைகளால் வரையப்பட்டதாகக் கூறப்படுகிறது. [5] (அதாவது வாரத்தில் ஏழு நாட்கள்). இந்த புதினத்தை வங்காள மொழியில் பசி தலைமுறை புகழ் கவிஞர் மலாய் ராய் சவுத்ரி மொழிபெயர்த்துள்ளார். இதற்காக அவருக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. இந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் (1992) சியாம் பெனகலின் படம் சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை வென்றது.
  • கியாரா சப்னோ கா தேஷ்
  • பிரராம்ப வா சமபன் போன்றவை அவரது பிற புதினங்களாகும்.

விருதுகள்

[தொகு]
  • இந்திய அரசால் பத்மஸ்ரீ விருது - 1972
  • ராஜேந்திர பிரசாத் ஷிகர் சம்மன் விருது
  • பாரத் பாரதி சம்மன் விருது
  • மகாராஷ்டிர கௌரவ் விருது - 1994
  • கௌடியா நியாஸ் விருது
  • வியாச சம்மன் விருது
  • 1984, வேலி டர்மரிக் சிறந்த பத்திரிகை விருதுகள்
  • 1988, சிறந்த நாடக ஆசிரியர் விருது மஹாராணா மேவார் அறக்கட்டளை விருது
  • 1989, சங்கீத நாடக அகாதமி விருது, தில்லி

மொழிபெயர்ப்பு

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. "A trio of aces". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 1 May 2010 இம் மூலத்தில் இருந்து 2014-02-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140202101116/http://articles.timesofindia.indiatimes.com/2010-05-01/india/28306316_1_ram-leela-lord-ram-common-man. 
  2. The Illustrated weekly of India: Volume 108, Issues 39–50, 1987.
  3. "SNA: List of Akademi Awardees". Sangeet Natak Akademi Official website. Archived from the original on 17 February 2012.
  4. 4.0 4.1 4.2 "About the Playwright and Translator". Manoa (University of Hawai'i Press) 22 (1): 142–143. 2010. doi:10.1353/man.0.0086. 
  5. Peter Gaeffke (1978). A history of Indian literature: Modern Indo-Arayan literatures, part I. Otto Harrassowitz Verlag. p. 62. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-447-01614-0.


வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தரம்வீர்_பாரதி&oldid=3793909" இலிருந்து மீள்விக்கப்பட்டது