தரமான பயிர் பாதுகாப்பு இரசாயனத்திற்கு அமைய வேண்டிய நற்பண்புகள்
Jump to navigation
Jump to search
தரமான பயிர் பாதுகாப்பு இரசாயனத்திற்கு அமைய வேண்டிய நற்பண்புகள் என்பவை பூச்சிக்கொல்லிகளில் இருக்கவேண்டிய பண்புகளைக் குறிக்கிறது. அவை பின்வறுமாறு;[1]
- பயிர் பாதுகாப்பு இரசாயனத்தில் குறிப்பிட்ட அளவு நச்சு தன்மை இருப்பதோடு பூச்சி மற்றும் நோய்க்காரணிகளை உடனடியாக கட்டுபடுத்தும் திறனை பெற்றிருக்கவேண்டும்.
- இரசாயன மருந்துகளின் நச்சு குறிப்பிட்ட நாள் வரை பயிரில் தங்கி இருந்து பூச்சி பூசணங்களைக் கட்டுபடுத்தும் தன்மை பெற்றிருக்கவேண்டும்.
- சேமிப்பில் இருக்கும்போது குறிப்பிட்ட காலம் வரை அதனுடைய வீரியம்குறைய கூடாது .
- இரசாயன மருந்துகள் குறிப்பிட்ட பூச்சி மற்றும் நோய்க் காரணிகளை மட்டுமே அழிக்கவேண்டும் மாறாக பயிருக்கு நச்சு தன்மை ஏற்படுத்த கூடாது .
- இரசாயன மருந்துகளை கையாளும் மனிதர்களுக்கு எந்த விதமான கெடுதலும் பின் விளைவுகளும் ஏற்படுத்தகூடாது .
- இருவகையான பூச்சி கொல்லி மற்றும் பூசணைகொல்லி மருந்துகளை ஒன்றொடொன்று சேர்க்கும்போது அவை இணைந்து செயல்பட கூடியதாக இருக்கவேண்டும்.
- இரசாயன மருந்துகள் சுற்றுபுற சூழ்நிலை மற்றும் கால்நடை களுக்கு எந்த விதமான தீங்கும் ஏற்படத்த கூடாது . .
- இரசாயன மருந்துகள் நன்மை செய்யும் பூச்சிகளுக்கு தீங்கு ஏற்படத்தகூடாது .
- இரசாயன உபயோகப்படுத்தும் பயிர் பாதுகாப்பு சாதனங்களில் படியவோ அரிக்கவோ கூடாது .
மேற்கோள்கள்[தொகு]
- ↑ தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம். தொழிற்கல்வி மேல்நிலை முதலாம் ஆண்டு ப.எண்.170