உள்ளடக்கத்துக்குச் செல்

தரண் ஆதர்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தரண் ஆதர்சு
Taran Adarsh
2016ஆம் ஆண்டில் ஆதர்சு
பிறப்பு13 சூன் 1965 (1965-06-13) (அகவை 61)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணி
  • திரைப்பட விமர்சகர்
  • வர்த்தக ஆய்வாளர்
செயற்பாட்டுக்
காலம்
1980–முதல்
உறவினர்கள்கோமல் நாக்டா (சகோதரர்)

தரண் ஆதர்சு (Taran Adarsh) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஒரு திரைப்பட விமர்சகரும் வர்த்தக ஆய்வாளரும் ஆவார்.[1][2] 1965ஆம் ஆண்டு சூன் மாதம் 13 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். சமூக ஊடகங்களில் வர்த்தகப் புள்ளிவிவரங்கள் மற்றும் அனுமதிச்சீட்டு விற்பனை புதுப்பிப்புகளை வழங்குவதற்கும், இந்தி திரைப்படத்துறையின் இணையதள மதிப்புரைகளுக்காகவும் இவர் மிகவும் பிரபலமானார்.[3]

தொழில்

[தொகு]

தரண் ஆதர்சு தனது 15 வயதில் வாராந்திர திரைப்படத்துறை இதழான டிரேட் கைடு என்ற வர்த்தக வழிகாட்டி இதழ் மூலம் தனது பத்திரிகை வாழ்க்கையைத் தொடங்கினார். 1994ஆம் ஆண்டில், ஆதர்சு செசாத்து கான் மற்றும் கசுமேரா சா நடித்த பாலிவுட் திரைப்படம் அடிப்படையிலான தொலைக்காட்சி தொடர் அலோ பாலிவுட்டை தயாரித்து எழுதினார். வர்த்தக வழிகாட்டியில் தனது பணியைத் தொடர்ந்தார். தற்போது இந்தி திரைப்படத்துறையின் பொழுதுபோக்கு வலைத்தளமான பாலிவுட் அங்காமாவில் தீவிர திரைப்பட விமர்சகர், பத்திரிகையாளர் மற்றும் வர்த்தக ஆய்வாளராக உள்ளார் [4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Sen, Meheli (1 March 2017). Haunting Bollywood: Gender, Genre, and the Supernatural in Hindi Commercial Cinema (in ஆங்கிலம்). University of Texas Press. p. 216. ISBN 978-1-4773-1160-8.
  2. ↑ Devasundaram, Ashvin Immanuel (25 October 2018). Indian Cinema Beyond Bollywood: The New Independent Cinema Revolution (in ஆங்கிலம்). Routledge. ISBN 978-1-351-25424-3.
  3. ↑ Rai, Amit S. (27 May 2009). Untimely Bollywood: Globalization and India's New Media Assemblage (in ஆங்கிலம்). Duke University Press. p. 128. ISBN 978-0-8223-9233-0.
  4. ↑ Ghosh, Pratik (14 March 2008). "Films: interview with Taran Adarsh". Hindustan Times (in ஆங்கிலம்). Retrieved 2008-03-14.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தரண்_ஆதர்சு&oldid=4387656" இலிருந்து மீள்விக்கப்பட்டது