தரணிந்திரன்
தரணிந்திரன் King Dharanindra Sri Sanggrama Dhananjaya Indra Raja Mataram | |||||
---|---|---|---|---|---|
Indra Utawa Dharanindra Sangramadhananjaya | |||||
சிறீவிஜயம்–மாதரம் அரசர் | |||||
ஆட்சிக்காலம் | 775—800 | ||||
முன்னையவர் | ராக்காய் பனங்கரன் | ||||
பின்னையவர் | சமரகரவீரன் (Samaragrawira) | ||||
|
|
தரணிந்திரன் அல்லது மாதர இந்திர ராஜா (ஆங்கிலம்: Dharanindra அல்லது King Dharanindra; இந்தோனேசியம்: Indra Raja Mataram; ஜாவானியம்: Indra Utawa Dharanindra) என்பவர் 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிறீ விஜயப் பேரரசின் ஆட்சியாளர் ஆவார்.
பனங்கரனின் வாரிசான தரணிந்திரன், 775—800-ஆம் ஆண்டுகளின் காலக்கட்டத்தில், சிறீ விஜயப் பேரரசை ஆட்சி செய்தார்.[1]
அதே வேளையில் மத்திய ஜாவாவில் இருந்த மாதரம் இராச்சியத்தின் அரசராகவும் பொறுப்பு வகித்தார். தரணிந்திரன், சைலேந்திர அரச மரபைச் சேர்ந்தவர் ஆவார்.
வரலாறு
[தொகு]ஒரே காலக்கட்டத்தில், இரு இராச்சியங்களை ஆட்சி செய்த தரணிந்திரன், ஒரு சிறந்த ஆட்சியாளராகவும்; சைலேந்திராவின் வெளிநாட்டுப் படையெடுப்புகளுக்குப் பெருமை சேர்த்தவராகவும் அறியப்படுகிறார். 782-ஆம் ஆண்டு கெலுராக் கல்வெட்டில் (Kelurak inscription) அவரின் ஆட்சிப் பெயரான சிறீ சங்கராம தனஞ்செயன் (Sri Sanggrama Dhananjaya) எனும் பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளார்.[2]:91
கெலுராக் கல்வெட்டில் அவர் வைரவர வீரமர்த்தனன் (Wairiwarawiramardana) அல்லது "துணிச்சலாக எதிரிகளைக் கொன்றவர்" என்றும் புகழப் படுகிறார். தெற்கு தாய்லாந்து மலாய் தீபகற்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட லிகோர் பி கல்வெட்டிலும் (Ligor B inscription) சர்வரி மதவிமதன (Sarwwarimadawimathana) எனும் பெயர் காணப்படுகிறது; இந்தப் பெயர் அதே தரணிந்திரனைக் குறிக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
தாமரலிங்கா
[தொகு]தரணிந்திரன் ஒரு போர்க் குணமிக்க அரசராக அறியப்படுகிறார். அவர் வெளிநாடுகளுக்கு, பல இராணுவக் கடற்படைப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். மலாய் தீபகற்பத்தில் சயாமியர் கட்டுப்பாட்டில் இருந்த லீகோர் பகுதியையும் சைலேந்திரர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளார்.[3]
லிகோர் என்பது நக்கோன் சி தம்மராத் இராச்சியம் (Nakhon Si Thammarat) (தாய்: อาณาจักรนครศรีธรรมราช) என்று அழைக்கப்படுகிறது. கி.பி. 10-ஆம்; 13-ஆம் நூற்றாண்டுகளில் இந்த இராச்சியம் தாமரலிங்கா (Tambralinga) என்று அழைக்கப்பட்டது.[4]
சென்லா
[தொகு]நகர சிறீ தருமராஷ்டிரா (Nagara Sri Dharmarashtra) என்று முன்பு அழைக்கப்பட்ட தாமரலிங்கா இராச்சியம், தற்போது தாய்லாந்தில் ஒரு மாவட்டம் ஆகும். நீர் சென்லா (Water Chenla); கெமர்: ចេនឡាទឹកលិច) எனும் சயாமிய பகுதியில் இருந்து லிகோரைக் கைப்பற்றிய பிறகு தரணிந்திரன், 774; 770-ஆம் ஆண்டுகளில், சம்பா இராச்சியத்தின் மீது தாக்குதல்களைத் தொடங்கினார்.[5]
பின்னர் 9-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மீக்கோங் படுகையில் இருந்த தெற்கு கம்போடியா கைப்பற்றப்பட்டது.
இரண்டாம் செயவர்மன்
[தொகு]அந்தக் காலகட்டத்தில், ஜாவாவைச் சேர்ந்த இரண்டாம் செயவர்மன்[6] (Jayavarman II), சைலேந்திர (சிறீ விஜய) படையின் தளபதியாக இருந்திருக்கலாம்; சிறீவிஜய அரசர் தரணிந்திரனின் ஆணையின் பேரில், இரண்டாம் செயவர்மன் புதிய கம்போடியா மன்னராகப் பதவியேற்று; புதிய அங்கோர் வம்சம் (Angkor Dynasty) நிறுவப்பட்டு இருக்கலாம் என நம்பபடுகிறது.[7]
மன்னர் தரணிந்திரன் தன் முன்னோடி ஆட்சியாளர் பனங்கரனின் கட்டுமான மரபைத் தொடர்ந்ததாகவும் தெரிய வருகிறது. மத்திய ஜாவா மஞ்சு கிரகா கோயிலின் கட்டுமானத்தைத் தொடர்ந்து முடித்தார்.[8]
காராங்தெங்கா கல்வெட்டு
[தொகு]மேலும் காராங்தெங்கா கல்வெட்டின் (Karangtengah inscription) (824 தேதியிட்டது) பதிவுகளின்படி,[9] மத்திய ஜாவா மெண்டுட் கோயில் அல்லது மத்திய ஜாவா நிங்காவென் கோயிலுடன் தொடர்புடைய வேணுவன கோயிலின் (Venuvana temple) கட்டுமானத்திற்கும் பொறுப்பேற்றார்.
போரோபுதூர் மற்றும் மத்திய ஜாவா பாவோன் கோயிலின் கட்டுமானத்திற்கும், தரணிந்திரன் பொறுப்பேற்று இருக்கலாம் என்றும் அறியப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Slamet Muljana (2006). Sriwijaya. LKIS, Yogyakarta.
- ↑ Coedès, George (1968). Walter F. Vella (ed.). The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. ISBN 978-0-8248-0368-1.
- ↑ Roland Braddell (1980). A Study of Ancient Times in the Malay Peninsula and the Straits of Malaccam and Notes on Ancient Times in Malaya. Malaysian Branch of the Royal Asiatic Society. p. 398.
- ↑ Stuart Munro-Hay (2001). Nakhon Sri Thammarat: The Archaeology, History and Legend of a Southern Thai Town. White Lotus Press. p. 22.
- ↑ "Encyclopedia of Ancient Asian Civilizations by Charles F. W. Higham - Chenla - Chinese histories record that a state called Chenla..." (PDF). Library of Congress. Retrieved 13 July 2015.
- ↑ Jean Boisselier. Trends in Khmer Art Volume 6 of Studies on Southeast Asia. Ithaca, N.Y. : Southeast Asia Program, Cornell University, 1989. ISBN 0877277052.
- ↑ Takashi Suzuki (25 December 2012). "Śrīvijaya―towards ChaiyaーThe History of Srivijaya". http://www7.plala.or.jp/seareview/newpage6JII.html
- ↑ Gunawan Kartapranata; Septa Inigopatria; Emille Junior (2015-04-20), "Candi Sewu Mandala Suci Manjusrigrha", Harian Kompas via Youtube, retrieved 2018-09-08
- ↑ Drs. R. Soekmono (1988) [1973]. Pengantar Sejarah Kebudayaan Indonesia 2, 2nd ed (5th reprint ed.). Yogyakarta: Penerbit Kanisius. p. 46.