தயோ அசைல் குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தயோ அசைல் குளோரைடு (Tthioacyl chloride) என்பது RC(S)Cl என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு வேதி வினைக்குழுவாகும். இவ்வாய்ப்பாட்டில் உள்ள R என்பது ஒரு கரிம பதிலி ஆகும். தயோ அசைல் குளோரைடுகள் அமிலக் குளோரைடுகளை ஒத்த சேர்மங்களாகும். ஆனால் அரிதானவை மற்றும் வலு குறைந்தவையாகும். தயோ அசைல் குளோரைடு வகையில் நன்கு ஆராயப்பட்ட சேர்மம் தயோபென்சாயில் குளோரைடு ஆகும். இது செவ்வூதா நிறத்தில் ஓர் எண்ணெய் போல காணப்படுகிறது. டைதயோபென்சாயிக் அமிலத்தை குளோரின் மற்றும் தயோனைல் குளோரைடு ஆகியவற்றைச் சேர்த்து குளோரினேற்றம் செய்வதன் மூலம் தயோபென்சாயில் குளோரைடு தயாரிக்கப்படுகிறது[1]. பாசுகீனை குளோரினேற்றும் முகவராகப் பயன்படுத்தி இச்சேர்மத்தை தயாரிப்பது நவீன தயாரிப்பு முறையாகக் கருதப்படுகிறது.[2]. இத்தயாரிப்பு முறையில் கார்பனைல் சல்பைடு உடன் விளைபொருளாக உருவாகிறது.

PhCS2H + COCl2 → PhC(S)Cl + HCl + COS

எலக்ட்ரானை வெளியிடும் பொருட்களாக இச்சேர்மங்கள் அதிக நிலைப்புத்தன்மை கொண்டவையாக உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Staudinger, H.; Siegwart, J. (1920). "Ueber Thiobenzoylchlorid". Helvetica Chimica Acta 3: 824-33. doi:10.1002/hlca.19200030177. 
  2. Viola, H.;Mayer, R. (1975). "Eine neue Darstellungsmethode für aromatische Thiocarbonsäurechloride". Z. Chem. 15: 348. doi:10.1002/zfch.19750150904. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயோ_அசைல்_குளோரைடு&oldid=2749837" இருந்து மீள்விக்கப்பட்டது