தயோகார்பமேட்டுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொது கட்டமைப்பு வாய்ப்பாடுகள் - (1) மற்றும் - (2) தயோகார்பமேட்டுகள்

தயோகார்பமேட்டுகள் (Thiocarbamates) என்பவை கரிம கந்தகச் சேர்மங்கள் குடும்பத்தைச் சேர்ந்த வேதிச் சேர்மங்கள் ஆகும். இரண்டு வகையான தயோகார்பமேட்டு எசுத்தர் மாற்றியன்கள் காணப்படுகின்றன. ஆக்சிச – கார்பமேட்டுகள் அல்லது ஆ-கார்பமேட்டுகள், ROC(=S)NR2 மற்றும் கந்தக-கார்பமேட்டுகள் அல்லது க- கார்பமேட்டுகள், RSC(=O)NR2, என்பன அவ்விரண்டு மாற்றியன்களாகும். ஆ-கார்பமேட்டுகள், க- கார்பமேட்டுகளாக மாற்றமடையை இயலும். உதாரணமாக நியுமான்–குவார்ட் மறுசீராக்கல் வினையைக் குறிப்பிடலாம்.

தொகுப்பு வினை[தொகு]

தயோசயனேட்டுகளை நீராற்பகுப்பு வினைக்கு உட்படுத்தி தயோகார்பமேட்டுகளைத் தொகுப்பு முறையில் தயாரிக்க முடியும்:[1]

RSCN + H2O → RSC(=O)NH2.

இங்கு R என்பது அரைல் ஆகும், இரீமச்நெய்டர் தயோகார்பமெட்டு தொகுப்புவினை என்ற பெயரால் இவ்வினை அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. March, 6th edn., p. 1269
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயோகார்பமேட்டுகள்&oldid=2747853" இலிருந்து மீள்விக்கப்பட்டது