தயா பாய்
தயா பாய் | |
---|---|
![]() தயா பாய் | |
பிறப்பு | மெர்சி மேத்யூ 1940 (அகவை 82–83) |
தேசியம் | இந்தியர் |
பணி | சமூக பணி, செயல்பாட்டாளர் |
அறியப்படுவது | பழங்குடியினர் மேம்பாடு |
தயா பாய் (Daya Bai)(பிறப்பு மெர்சி மேத்யூ) என்பவர் கேரளாவைச் சேர்ந்த இந்தியச் சமூக ஆர்வலர் ஆவார். மத்திய இந்தியாவின் பழங்குடியினர் மேம்பாட்டிற்காக இவர் சேவையாற்றுகிறார். இவர் மத்தியப் பிரதேசத்தில் சிந்த்வாரா மாவட்டத்தின் பாருல் கிராமத்தில் வசிக்கிறார்.
ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]
1940இல் பிறந்த மெர்சி மேத்யூ, கேரளாவின் பாலாவில் உள்ள வளமான கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவர். கடவுள் மீது வலுவான நம்பிக்கையுடன் அவருடைய குழந்தைப்பருவம் மகிழ்ச்சியான கழிந்தது.[1]
கல்வி[தொகு]
தொடக்கக் கல்வியினை கொச்சுகோட்டரம் தொடக்கப் பள்ளி மற்றும் கலங்கரை விளக்கம் தூய வளனார் உயர்நிலைப் பள்ளியில் கற்றார். உயிரியலில் பட்டம் இவர், மும்பை பல்கலைக்கழகத்தில் சமூகப் பணியில் முதுநிலைப் பட்டம் பெற்றார். சட்டம் பயின்றுள்ள பாய், முதுநிலைப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மத்தியப் பிரதேசத்தில் உள்ள பழங்குடியினருடன் மேற்கொண்ட களப்பணியின் காரணமாக அவர்களுடைய மேம்பாட்டிற்காக பணியாற்றத் தொடங்கினார்.[2]
சமூக பணி[தொகு]
பாய், தனது 16 வயதில் கன்னித்துறவியாக மாறி தனது சொந்த ஊரிலிருந்து வெளியேறினார்.[3] பின்னர் இந்தியாவின் பழங்குடியின மக்களுக்காகச் சேவை செய்யத் தொடங்கினார். ஊக்கமளிக்கும் வகையில் பழங்குடி மக்களுடன் பேசினார். உள்ளூர் பிரச்சனைகளைத் தீர்க்க அமைதி வழிப் போராட்டம், பிரச்சார இயக்கம் நடத்தி பள்ளிகளைத் திறக்கச் செய்தார். மத்தியப் பிரதேசத்தில் புறக்கணிக்கப்பட்ட பழங்குடி கிராமங்களுக்கு அதிகாரமும் அடிப்படை வசதிகளும் கிடைக்க வழிவகைச் செய்தார். பீகார், அரியானா, மத்தியப் பிரதேசம், மகாராட்டிரா மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள வனவாசிகள் மற்றும் கிராமவாசிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போராட்டங்களைத் முன்னெடுத்தார். இவர் நர்மதா பச்சாவ் அந்தோலன் மற்றும் செங்காரா போராட்டத்துடன் தொடர்புடையவர். வங்கதேசத்தில் நடந்த போரின்போது இவர் தனது சேவைகளை பொது மக்களுக்கு வழங்கினார். பின்னர், விடுதலையின் இறையியலைப் பின்பற்றும் தயா பாய், மத்தியப் பிரதேசத்தில் சிந்த்வாரா மாவட்டத்தின் கோண்டு மக்களுடன் தங்கினார். அங்கு பாருல் கிராமத்தில் பள்ளி ஒன்றை நிறுவினார். தயா பாய் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று தங்களை எப்படிக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறார். ஒரு கிராமத்தில் தனது பணி முடிந்தபின் பின்னர் அடுத்த கிராமத்திற்குச் செல்கிறார்.[4]
1990களின் பிற்பகுதியில், வறுமையை ஒழிப்பதற்கான ஒரு கருவியாக சுயாயம் சகாயத குழுவைத் தொடங்கினார். இதனால் இவருக்கும் இடைத்தரகர்கள், பணம் கொடுப்பவர்கள் மற்றும் கிராமத் தலைவர்களுக்குமிடையே கோபத்தைச் சம்பாதித்தது. வங்கியில் உள்ள பெண் அதிகாரிகளைத் தாழ்த்தப்பட்ட மற்றும் ஏழ்மையான ஏழைகளின் மேம்பாட்டிற்காக தங்கள் பதவியைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.[5]

பெருமை[தொகு]
ஒற்றையாள் அல்லது 'ஒரு நபர்,' ஷைனி ஜேக்கப் பெஞ்சமின் எழுதிய தயா பாய் குறித்த ஒரு மணி நேர ஆவணப்படம் ஆகும்.[4] நந்திதா தாஸ், 2005ஆம் ஆண்டில் இவரது வாழ்க்கையின் உத்வேகமாக அமைய தயா பாய் காரணமாக இருந்தார் என அஞ்சலியில் எழுதினார்.[6]
திரைப்படங்கள்[தொகு]
கந்தன் - தி லவ்வர் ஆஃப் கலர் 2021 திரைப்படம் தயா பாய் வாழ்க்கை வரலாற்றினை கூறும் படமாகும். மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளர் ஸ்ரீவருணின் இந்தியில் இத்திரைப்படத்தினை தயாரித்தார். இந்தப் படத்தில், தயா பாய் வேடத்தில் பெங்காலி நடிகை பிதிதா பாக் நடித்திருந்தார்.
விருதுகள்[தொகு]
பல்வேறு அமைப்புகளும் நிறுவனங்களும் தயா பாயின் சேவையினைப் பாராட்டிப் பல விருதுகளை வழங்கியுள்ளன. இவர் 2007ஆம் ஆண்டின் சிறந்த மகளிருக்கான விருதினையும்[7], இந்தியா தேசிய மனித உரிமைகள் விருதினையும், அயோத்தி இராமாயண அறக்கட்டளையின் ஜனனி ஜாக்ரதி விருதினையும், சுவிட்சர்லாந்தின் சிறந்த பெண் விருது, கேரளாவில் சுரேந்திரநாத் அறக்கட்டளை விருது[8], சிறந்த சமூக சேவகருக்கான தர்ம பாரதி தேசிய விருதினை 2001ஆம் ஆண்டிலும், பி.கே.ஏ. ரகீம் நினைவு விருதினை 2010ஆம் ஆண்டிலும், [9] மற்றும் கே.. எச். எம். கலாச்சார விருதினை அண்மையில் (2021)(ஹாஜி கேஎச்எம் இசுமாயில் சாகிப்பின் நினைவாக சங்கனாச்சேரி கேஎச்எம் இசுமாயில் ஆய்வு மையத்தால் நிறுவப்பட்டது) பெற்றார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "daya bai,lady of fire" இம் மூலத்தில் இருந்து 2018-12-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225122252/http://infochangeindia.org/other/changemakers/index.php?option=com_content&view=article&id=7038.
- ↑ Dayabai, Lady of Fire എന്ന തലക്കെട്ടിലെ ഇംഗ്ലീഷ് ലേഖനം . (ശേഖരിച്ചത് 2011 ഫെബ്രുവരി 8)[தொடர்பிழந்த இணைப்பு]வார்ப்புரு:പ്രവർത്തിക്കാത്ത കണ്ണി
- ↑ "Policies of Church contrary to Christ" இம் மூலத்தில் இருந்து 2018-06-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180625053659/http://www.humanistassociation.org/policies-of-church-contrary-to-christ/.
- ↑ 4.0 4.1 Face of compassion
- ↑ "One-woman army drives financial inclusion in rural Madhya Pradesh". 31 January 2012. http://www.thehindubusinessline.com/money-and-banking/onewoman-army-drives-financial-inclusion-in-rural-madhya-pradesh/article2848066.ece.
- ↑ "Mercy Mathew" இம் மூலத்தில் இருந்து 2018-03-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180322022726/http://www.nanditadas.com/nanditawrites22_inc.htm.
- ↑ Kiran Bedi calls for change in education system[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ ദയാമയി എന്ന തലക്കെട്ടിൽ ജന്മഭൂമി ഓൺലൈനിൽ 2010 നവംബർ 27 നു സി. രാജ എഴുതിയ ലേഖനം . (ശേഖരിച്ചത് 2011 ഫെബ്രുവരി 8) [தொடர்பிழந்த இணைப்பு]வார்ப்புரு:പ്രവർത്തിക്കാത്ത കണ്ണി
- ↑ "അവാർഡ് തുക അവശർക്ക് നൽകി ദയാബായി എന്ന തലക്കെട്ടിൽ മാതൃഭൂമി പത്രത്തിൽ 2010 ഒക്ടോബർ 11നു പ്രസിദ്ധീകരിച്ച വാർത്ത. (ശേഖരിച്ചത് 2011 ഫെബ്രുവരി 8)" இம் மூலத்தில் இருந்து 2010-10-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101014172620/http://www.mathrubhumi.com/online/malayalam/news/story/563904/2010-10-11/kerala.
மேலும் படிக்க[தொகு]
- Nair, Shreejaya (2015-12-29). "How Mercy became Daya Bai" (in en). https://www.deccanchronicle.com/151228/lifestyle-offbeat/article/how-mercy-became-daya-bai.
வெளி இணைப்புகள்[தொகு]
- "A Documentary about Daya Bhai." (in en). M TV Orthodox TV. https://www.youtube.com/watch?v=3wk5aqCm9Ys.