உள்ளடக்கத்துக்குச் செல்

தயாளன் ஹேமலதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தயாளன் ஹேமலதா (Dayalan Hemalatha (பிறப்பு: செப்டம்பர் 29, 1994) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார்[1]. இவர் வலதுகை மட்டையாளரும் வலதுகை புறத்திருப்ப பந்துவீச்சாளருமான இவர் இந்திய தேசிய அணி தவிர டிரைல் பிளேசர் மற்றும் தமிழ்நாடு பெண்கள் துடுப்பாட்ட அணி ஆகிய அணிகளுக்காகவும் விளையாடி வருகிறார்.[2] 2018 ஆம் ஆண்டில் இங்கிலாந்து மகளிர் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட போட்டித் தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்தார். ஆனால் விளையாடும் அணியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை.[3] இவர் செப்டம்பர் 11, 2018 அன்று இலங்கை பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக தனது முதல் சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார்.[4] இவர் இந்திய மகளிர் துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார்.

அக்டோபர் 2018 இல், மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற 2018 ஐசிசி மகளிர் உலக இருபதுக்கு -20 போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றார்.[5][6] இவர் நவம்பர் 9, 2018 அன்று நியூசிலாந்திற்கு எதிராக தனது பன்னாட்டு மகளிர் இருபது20 போட்டித் தொடரில் அறிமுகமானார்.[7]

சர்வதேசப் போட்டிகள்[தொகு]

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்[தொகு]

2018 ஆம் ஆண்டில் இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து ஐசிசி பென்கள் வாகையாளர் கோப்பைத் தொடரில் விளையாடியது. செப்டமபர் 11, காலி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் நான்கு ஓவர்களை வீசி 19 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஓர் இலக்கினைக் கைப்பற்றினார். மட்டையாட இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தப் போட்டியில் இந்தியத் துடுப்பாட்ட அணி ஒன்பது இலக்குகளால் வெற்றி பெற்றது. 181 பந்துகள் மீதம் இருந்த நிலையில் இந்தியா வெற்றி பெற்றது.[8] 2019 ஆம் ஆண்டில் இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஐசிசி பென்கள் வாகையாளர் கோப்பைத் தொடரில் விளையாடியது. பெப்ரவரி 1,ஹாமில்டனில் உள்ள துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இரு ஓவர்களை வீசி 22 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. மட்டையாட்டத்தில் 32 பந்துகளில் 13 ஓட்டங்கள் எடுத்து கெர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணி எட்டு இலக்குகளால் வெற்றி பெற்றது.124 பந்துகள் மீதம் இருந்த நிலையில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

பன்னாட்டு இருபது20[தொகு]

2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐசிசி பெண்கள் உலக கோப்பைத் துடுப்பாட்டத் தொடரில் இவர் விளையாடினார். நவம்பர் 9 புராவின்சு மைதானத்தில் நியூசிலாந்து பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் அறிமுகமனார். இந்தப் போட்டியில் ஏழு பந்துகளில் 15 ஓட்டங்கள் எடுத்து காஸ்பெர்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் நான்கு ஓவர்களை வீசி 26 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து மூன்று இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் இந்தியத் துடுப்பாட்ட அணி 34 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.

சான்றுகள்[தொகு]

  1. "Dayalan Hemalatha". Espncricinfo.com. பார்க்கப்பட்ட நாள் 22 January 2017.
  2. "Dayalan Hemalatha". Cricketarchive.com. பார்க்கப்பட்ட நாள் 22 January 2017.
  3. "Uncapped Hemalatha called up for England ODIs". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 March 2018.
  4. "1st ODI, ICC Women's Championship at Galle, Sep 11 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 September 2018.
  5. "Indian Women's Team for ICC Women's World Twenty20 announced". Board of Control for Cricket in India. Archived from the original on 28 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 28 September 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "India Women bank on youth for WT20 campaign". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 28 September 2018.
  7. "1st Match, Group B, ICC Women's World T20 at Providence, Nov 9 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 September 2018.
  8. "Full Scorecard of Sri Lanka Women vs India Women, ICC Women's Championship, 1st ODI - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-04.

வெளியிணைப்புகள்[தொகு]

தயாளன் ஹேமலதா-ஈ எஸ் பி என் வலைத்தளம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தயாளன்_ஹேமலதா&oldid=3719189" இலிருந்து மீள்விக்கப்பட்டது