உள்ளடக்கத்துக்குச் செல்

தயானா வாலென்சியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தயானா வாலென்சியா
Diana Valencia
பிறப்புபொகோட்டா, கொலம்பியா
வாழிடம்கனடா
துறைமீப்புவிகள், குறுநெப்டியூன்கள்
பணியிடங்கள்தொராண்டோ பல்கலைக்கழகம், சுகார்பரோ
கல்வி கற்ற இடங்கள்ஆர்வார்டு பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்இரிச்சர்டு ஜே. ஓகானெல், திமித்தார் டி. சசெலோவ்
அறியப்படுவதுமீப்புவிகள், குறுநெப்டியூன்கள்

தயானா வாலென்சியா (Diana Valencia) (பிறப்பு: 1978) ஒரு கொலம்பியக் கோள் அறிவியலாளரும் வானியற்பியலாளரும் ஆவார். இவர் சுகார்பரோவில் உள்ள தொராண்டோ பல்கலைக்கழகத்தில் இயற்பியல், வானியற்பியல் துறையிலும் தொராண்டோ பல்கலைக்கழகத்தில் வானியல், வானியற்பியல் துறையிலும் உதவி பேராசிரியராக உள்ளார்.[1][2]

இவர் தன் முனைவர் பட்ட அறிவுரைக்குழுவினருடன் இணைந்து புவியை விட 10 மடங்கு பொருண்மை வாய்ந்த பெரிய புறவெளிக் கோள்களுக்கு மீப்புவிகள் எனப் பெயரிட்டார். இந்தக் குழுவில் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தின் இரிச்சர்டு ஓ கானலும் திமித்தார் சசெலோவ் இருந்தனர். இவர் வளிமப் பெருன்ங்கோள்களுக்கும் புவிக்கும் இடைப்பட்ட பொருண்மையுள்ள புறவெளிக் கோள்களை ஆய்வு செய்தார்.[3]

வாழ்க்கை

[தொகு]

இவர் கனடா நாட்டில் கொலம்பியாவில் உள்ள இலாசு ஆந்தெசு பல்கலைக்கழகத்தில் இய்ற்பியலில் இளவல் பட்டம் படிக்க இவர் புலம்பெயர்ந்தார். இவரது குடும்பத்தில் அணைவருமே பொறியாளர்களாக இருந்தபோதும் இவர் கொலம்பியாவில் வரலாற்றாசிரியராகவோ பொருளியல் வல்லுனராகவோ வாழ விரும்பியுள்ளார். என்றாலும் இவர் இறுதியாக வேதிப் பொறியாளராக இருந்த தன் தாயின் தாக்கத்துக்கு ஆளாகியுள்ளார்.[4]> இவர் கனடாவில் வாழ்ந்தபோது அறிவியலில் பெண்களுக்கு உள்ள வாய்ப்புகளை உணர்ந்து டொராண்டோ பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் சேர்ந்து கலை இளவல், அறிவியல் முதுவர் பட்டங்களைப் பெற்றார். இவர் முனைவர் பட்டம் படிக்க விரும்பி ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அப்போது ஒரு பேராசிரியர் கேட்ட கேள்வி இவருக்குப் பேரூக்கம் தந்துள்ளது. அவர் கேட்ட கேள்வி நம் புவியின் பொருண்மை இருமடங்கானால் என்னவாகும் என்பதே. எனவே இவர் புறவெளிக்கோள்களின் ஆய்வில் ஈடுபடலானார். இவருக்கு ஒரு மகளும் மகனும் பிறந்தனர்.[1][5]

தேர்ந்தெடுத்த கல்விப்பணிகள்

[தொகு]

வாலென்சியா 2006 இல் " பொருண்மை மிக்க கோள்களின் அகக் கட்டமைப்பு" எனும் தலைப்பில் ஆய்வுரையொன்றை வெளியிட்டார். இது புவியினும் பொருண்மை மிகுந்த புறவெளிக் கோள்களின் ஆய்வுக்கு வழிகாட்டியது.[6]

இவரது 2007 ஆம் ஆண்டைய " முதல் மீப்புவிக் கோளகளின் ஆர, கட்டமைப்புப் படிமங்கள்" எனும் ஆய்வு பல்வேறு பொருண்மையும் ஆரமும் உட்கூறுகளும் உள்ள புரவெளிக் கோள்களைக் கருத்தில் எடுத்துக் கொண்டது. இவற்றில் இரும்பு அகடும் பாறை மெல்லடுக்குகளும் பனி நீர்மக் கூடுகள் அமைந்த புறவெளிக் கோள்களும் கூட உள்ளடங்கின.[6]

புறவெளிக் கோள்களில் மாந்தரின வாழ்தகவைக் கருதுவதால் புவியைப் போலவே அங்கு நிகழும் கண்டத்திட்டுகளின் இயக்கம் வகிக்கும் பங்களிப்பு பற்றிய ஆய்வு முதன்மையிடம் வகிக்கிறது. இவரது மற்றொரு வெளியீடான 2007 ஆம் ஆண்டைய "மீப்புவிக் கோள்களில் கண்ட்த்திட்டு இயக்கத்தின் தவிர்க்கவியலாமை" எனும் தலைப்பு உயர் தகைவுகளும் மெல்லிய பாறைக்கோளமும் பேரளவுப் பொருண்மையும் கோண்ட மீப்புவிக் கோள்கள் தவிர்க்கவியலாமல் கண்டத்திட்டு இயக்கத்துக்கு ஆட்படுதலை ஆய்வு செய்கிறது.[7]

இவர் தனது 2013 ஆம் ஆண்டைய " GJ 1214b, மற்றும் பிற நெப்டியூன்சார் புறக்கோள்களின் மொத்த உட்கூறுகள்" எனும் ஆய்வு புறவெளிக் கோள்களின் வளிமண்டலக் உட்கூறுகள் அவற்றின் பொருண்மை, ஆரம், அகச் சிறப்பியல்புகள், படிமலர்ச்சி ஆகிய காரணிகளைச் சார்ந்திருத்தலைக் காட்ட முயல்கிறது.[8]

இவரது 2018 ஆம் ஆண்டைய "ஓதம் தூண்டும் தட்டியக்க நிலைமையில் வாழ்தகவு" எனும் ஆய்வு கோளின் எரிமலைச் செயற்பாட்டாலும் அதன்வழி கரிமம் பசால்ட்டுறு கடல் முகட்டில் படிந்து கோளின் மெல்லடுக்கிலும் மீள நுழைவதாலும் உருவாகும் கரிம குத்துநிலைச் சுழற்சியை அறிமுகப்படுத்துகிறது. இந்த வெப்பச் சுழற்சி சார்ந்த தட்டியக்கம் புவியின் கண்டத்தட்டியக்கத்துக்கு நிகரானதே. இது கரிமச் சிலிகேட்டுச் சுழற்சிக்கு வழிவகுத்துப் பல பில்லியன் ஆண்டுகளுக்குப் புவியை வாழ்தகவுடையதாக மாற்றுகிறது.[9]

இவர் "ஓர் எந்திரம் கோள்களின் மொத்தல் விளைவைக் கற்க முடியுமா?", எனும் ஆய்வை 2019 ஆம் ஆண்டில் வெளியிட்டார். இந்த ஆய்வு கோளகள் உருவாகும் கடைசி கட்டங்களில் கோள்களின் மொத்தல்களால் ஏற்படும் விளைவுகளை முன்கணிப்பதற்கான மேம்பட்ட முறைகளைத் தேடுகிறது. இந்த எந்திரக் கற்றல் அணுகுமுறை வல்லமை மிக்க வாய்ப்பாக விளங்குகிறது. இந்த முறையியல் மேலும் சிறந்த மொத்தும்- இலக்குப் பொருண்மைக்கான உயர்விகிதமும் தாழ்நிலை விரைவுகளும் அமைந்த படிமங்களை உருவாக்கும் ஆய்வுக்குத் தேவைப்படும் மாறிகளை இனங்காண்கிறது.[10]

தகைமைகள்

[தொகு]
  • இவர் 2008 இல் பிரான்சு நாட்டின் நைசு நகரில் உள்ள அசூர் கோத்தே நோக்கீட்டகத்தின் பாயின்கேர் முதுமுனைவர் ஆய்வு நல்கையைப் பெற்றார்.[11]
  • இவர் ஆர்வார்டு பல்கலைக்கழகப் புவி, கோள் அறிவியல் புல உயிர்த்தோற்ற நிறுவனத்தின் முன்னாள் மாணவர் ஆவார்.[12]
  • இவர் 2010 இல் நாசாவின் கார்ல் சேகன் முதுமுனைவர் படிப்புக்கான நல்கையைப் பெற்றுள்ளார்.[11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Monsalve, Maria Mónica (10 February 2019). "Tres astrónomas colombianas que la están rompiendo" (in Spanish). El Espectador (Bogota, Colombia: El Espectador) (Ciencia). https://www.elespectador.com/noticias/ciencia/tres-astronomas-colombianas-que-la-estan-rompiendo-articulo-838947. பார்த்த நாள்: 24 November 2019. 
  2. Valencia, Diana. "Dr". University of Toronto Scarborough Faculty. University of Toronto Scarborough. பார்க்கப்பட்ட நாள் 20 November 2019.
  3. Valencia, Diana; Sasselov, Dimitar D.; O'Connell, Richard J. (10 February 2007). "Radius and Structure Models of the First Super-Earth Planet". The Astrophysical Journal 656 (1): 545–551. doi:10.1086/509800. Bibcode: 2007ApJ...656..545V. https://archive.org/details/sim_astrophysical-journal_2007-02-10_656_1/page/545. 
  4. Salazar, Isabel; Montoya, Carolina (19 February 2019). "Entrevista a Diana Valencia, astrofísica planetaria" (Live Television Interview). HoraPico (in Spanish). Bogota, Colombia: Republic of Colombia. பார்க்கப்பட்ட நாள் 23 November 2019.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. Valencia, Diana. "Curriculum Vitae". University of Toronto Department of Astronomy & Astrophysics Directory Website. University of Toronto. பார்க்கப்பட்ட நாள் 21 November 2019.
  6. 6.0 6.1 Valencia, Diana; O'Connell, Richard J.; Sasselov, Dimitar (April 2006). "Internal Structure of Massive Terrestrial Planets". Icarus 181 (2): 545–554. doi:10.1016/j.icarus.2005.11.021. Bibcode: 2006Icar..181..545V. https://www.sciencedirect.com/journal/icarus/vol/181/issue/2. பார்த்த நாள்: 22 November 2019. 
  7. Valencia, Diana; O'Connell, Richard J.; Sasselov, Dimitar D. (20 November 2007). "Inevitability of Plate Tectonics on Super-Earths". The Astrophysical Journal Letters 670 (1): 45–48. doi:10.1086/524012. Bibcode: 2007ApJ...670L..45V. 
  8. Valencia, Diana; Guillot, Tristan; Parmentier, Vivien; Freedman, Richard S. (29 August 2013). "BULK COMPOSITION OF GJ 1214b AND OTHER SUB-NEPTUNE EXOPLANETS". The Astrophysical Journal 775 (1): 10. doi:10.1088/0004-637X/775/1/10. Bibcode: 2013ApJ...775...10V. 
  9. Valencia, Diana; Yun Yan Tan, Vivian; Zajac, Zachary (20 April 2018). "Habitability from Tidally Induced Tectonics". The Astrophysical Journal 857 (2): 106. doi:10.3847/1538-4357/aab767. Bibcode: 2018ApJ...857..106V. 
  10. Valencia, Diana; Paracha, Emaad; Jackson, Alan P. (29 August 2019). "Can a Machine Learn the Outcome of Planetary Collisions?". The Astrophysical Journal 882 (1): 35. doi:10.3847/1538-4357/ab2bfb. Bibcode: 2019ApJ...882...35V. 
  11. 11.0 11.1 "Sagan Postdoctoral Fellowship Recipients 2010 Postdoctoral Fellows". Sagan Postdoctoral Fellowship Recipients 2010 Postdoctoral Fellows. California Institute of Technology, National Aeronautics and Space Administration. பார்க்கப்பட்ட நாள் 25 November 2019.
  12. "Origins of Life Initiative". Origins of Life Initiative. The President and Fellows of Harvard College. பார்க்கப்பட்ட நாள் 25 November 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயானா_வாலென்சியா&oldid=4052605" இலிருந்து மீள்விக்கப்பட்டது