தயானா பெக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தயானா ஜீன் கின்லோச் பெக் (Diana Jean Kinloch Beck) (பிறப்பு: 1900 சூன் 29 - இறப்பு: 1956 மார்ச் 3) இவர் ஒரு ஆங்கில நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும் மற்றும் முதல் பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமாவார். இவர் இலண்டனில் உள்ள மிடில்செக்ஸ் மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை சேவையை நிறுவினார். வின்னி-தி-பூவின் ஆசிரியரான ஏ. ஏ. மில்னேவுக்கு பக்கவாதம் ஏற்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு அறுவை சிகிச்சை செய்ததற்காக பத்திரிகைகளில் இவர் கவனத்தைப் பெற்றார்.

சுயசரிதை[தொகு]

தயானா பெக் 1900 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் செஸ்டரின் ஹூலி என்ற இடத்திலொரு தையல்காரரான ஜேம்ஸ் பெக், மற்றும் மார்கரெட் ஹெலினா கின்லோச் ஆகியோருக்குப் மகளாகப் பிறந்தார். இவர் இலண்டன் பெண்கள் மருத்துவப் பள்ளியில் மருத்துவம் படிப்பதற்கு முன்பு குயின்ஸ் பள்ளியில் பயின்றார். அங்கு இவர் இரண்டு பரிசுகளையும் உதவித்தொகையையும் வென்றார். 1925 இல் பட்டம் பெற்ற பிறகு, அவர் இராயல் ஃப்ரீ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராகவும் பின்னர் 1930 களில் ஒரு அறுவை சிகிச்சை பதிவாளராகவும் பணியாற்றினார். இவர் நரம்பியல் அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற ஆக்ஸ்போர்டில் உள்ள ராட்க்ளிஃப் மருத்துவமனையில் ஹக் கெய்ர்ன்ஸின் கீழ் பயிற்சி பெற்றார். அங்கு இவர் போரின் போது காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொது அறுவை சிகிச்சை நிபுணராகவும் செயல்பட்டார். 1939 ஆம் ஆண்டில், ராயல் சொசைட்டி ஆஃப் மெடிசின் மருத்துவ பெண்களுக்கான வில்லியம் கிப்சன் ஆராய்ச்சி உதவித்தொகை இவருக்கு வழங்கப்பட்டது, மேலும் டோரதி ஸ்டூவர்ட் ரஸ்ஸலுடன் ஆக்ஸ்போர்டில் ஆராய்ச்சியை மேற்கொள்ள இந்த மானியத்தைப் பயன்படுத்தினார். விலங்கு பரிசோதனைகளைப் பயன்படுத்தி, இவர்கள் இடியோபாடிக் இன்ட்ராக்ரானியல் உயர் இரத்த அழுத்தத்திற்கான காரணங்களை ஆராய்ந்தனர் மற்றும் கிரானியோபிளாஸ்டிக்கு பல்வேறு ஒட்டுதல் பொருட்களுடன் பரிசோதனை செய்தனர்.

பெக் 1943 ஆம் ஆண்டில் ராயல் ஃப்ரீ மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை ஆலோசனை நிபுணராக நியமிக்கப்பட்டார். ஆனால் நடந்துகொண்டிருந்த போர் கரணமாக அடுத்த ஆண்டு தென்மேற்கு இங்கிலாந்திற்கான நரம்பியல் அறுவை சிகிச்சையின் அவசர மருத்துவ சேவைக்கு சேஸ் பண்ணை மருத்துவமனை மற்றும் பிரிஸ்டலுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இவர் 1947 இல் மிடில்செக்ஸ் மருத்துவமனையில் ஒரு நரம்பியல் அறுவை சிகிச்சை ஆலோசகர் நிபுணரானார். இலண்டன் கற்பித்தல் மருத்துவமனையில் முதல் பெண் ஆலோசகராக ஆனார். அது பெண் மாணவிகளை அனுமதிக்கவில்லை. மிடில்செக்ஸில், இவர் முதல் பெண்மணி மற்றும் ஊழியர்களில் முதல் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தார். அதே நேரத்தில் மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் ஒரே ஒரு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராகவும் இருந்தார். [1] பெக் மிடில்செக்ஸில் நரம்பியல் அறுவை சிகிச்சை சேவையை அமைத்து இயக்கி வந்தார், மேலும் இன்ட்ராசெரெப்ரல் ரத்தக்கசிவை நிர்வகிப்பது குறித்த முக்கியமான ஆராய்ச்சியை வெளியிட்டார். 1952 ஆம் ஆண்டில், வின்னி-தி-பூவின் ஆசிரியரான ஏ. ஏ. மில்னேவுக்கு பக்கவாதம் ஏற்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு அறுவை சிகிச்சை செய்ததற்காக பத்திரிகைகளில் அவர் கவனத்தைப் பெற்றார். தி டைம்ஸ் இவரது "குறிப்பிடத்தக்க அறுவை சிகிச்சையை" பாராட்டியது. ஆனால் மில்னேயின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் ஆன் த்வைட், இந்த அறுவை சிகிச்சை தன்னை "ஓரளவு முடக்கியது" என்று கூறியது; அவர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இறந்தார். பெக் தசைக் களைப்பு நோயினால் அவதிப்பட்டார். 1956 ஆம் ஆண்டில் ஒரு தசை களைப்பு நெருக்கடிக்கு சிகிச்சையளிக்க தைமெக்டோமியை மேற்கொண்டார். 1956 மார்ச் 3, அன்று நுரையீரல் தக்கையடைப்பினால் இவர் இறந்தார். [2]

முதல் பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்[தொகு]

நரம்பியல் அறுவை சிகிச்சையின் 2008 சுயவிவரம் பெக்கை உலகின் முதல் பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராகக் கருதுகிறது. பெக் ஏற்கனவே நரம்பியல் அறுவை சிகிச்சையில் ஆலோசகராக பணிபுரிந்தபோது, 1945 ஆம் ஆண்டில் அயோனெஸ்கு மருத்துவப் பள்ளியை மட்டுமே முடித்தார் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார் என்றாலும், ருமேனிய சோபியா அயோனெஸ்குவிற்கும் இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. [3]

குறிப்புகள்[தொகு]

  1. "Beck, Diana Jean Kinloch (1902–1956)". Plarr's Lives of the Fellows. Royal College of Surgeons. 22 January 2014. பார்க்கப்பட்ட நாள் 27 November 2017.
  2. https://academic.oup.com/neurosurgery/article-abstract/62/3/738/2558577?redirectedFrom=fulltext
  3. https://academic.oup.com/neurosurgery/article-abstract/62/3/738/2558577?redirectedFrom=fulltext
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயானா_பெக்&oldid=2910288" இலிருந்து மீள்விக்கப்பட்டது