தம்மிலேரு ஆறு
தோற்றம்

தம்மிலேரு ஆறு (Tammileru) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் கிருட்டிணா மாவட்டத்திற்கும் எலூரு மாவட்டத்திற்கும் இடையிலான எல்லையை உருவாக்கும் ஒரு நடுத்தர அளவு ஆறாகும். மேற்கு கோதாவரி மாவட்டத்தின் தேவரப்பள்ளி மண்டலத்தில் இந்த ஆறு தொடங்குகிறது. இந்த ஆறு பெரும்பாலும் வெள்ளத்தால் பாதிக்கப்படும். கிருட்டிணா மாவட்டத்தில் உள்ள பெர்ரி கிராமத்திற்கு அருகில் கொல்லேரு ஏரியில் தம்மிலேரு ஆறு கலக்கிறது.
தம்மிலேறு அணை 1980 ஆம் ஆண்டு 3,720 எக்டேர் நிலத்திற்கு பாசனம் செய்வதற்காக கட்டப்பட்டது.[1] [2]
ஏலூருக்கு அருகில் ஓடும் தம்மிலேரு ஆறு, இப்பகுதியின் இயற்கை அழகை மேம்படுத்துவதோடு அதன் நீர்ப்பாசனத் திறனால் விவசாய நடவடிக்கைகளுக்கும் பங்களிக்கிறது. இந்த ஆறு ஏலூருவின் முக்கியமான புவியியல் அம்சமாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ THAMMILERU RESERVOIR PROJECT.
- ↑ "Thammileru Dam D02325". Retrieved 19 August 2018.