உள்ளடக்கத்துக்குச் செல்

தம்மசக்ரா பிரவர்தன் நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தம்மசக்ரா பிரவர்தன் நாள்
தம்மசக்ரா பிரவர்தன் நாள் விழா கொண்டாடப்படும் இடம். நாக்பூர், மகாராட்டிரம், இந்தியா
அதிகாரப்பூர்வ பெயர்  धम्मचक्र अनुवर्तन दिन
  धम्मचक्र अनुवर्तन दिन
பிற பெயர்(கள்)தம்ம சக்கரத்தின் பிரகடன நாள்
கடைப்பிடிப்போர்அம்பேத்காரிசம், பௌத்தம்
வகைபௌத்தம், கலாச்சார விழா
முக்கியத்துவம்பி. ஆர். அம்பேத்கர் பௌத்தம் தழுவிய நாள்
நாள்14-15 அக்டோபர் 1956
நிகழ்வுஆண்டுதோறும்
தொடர்புடையனபௌத்தம்

தம்மசக்ரா அனுவர்தன் நாள் (Dhammachakra Pravartan Din) அல்லது தம்மசக்ரா அனுவர்தன் திவாசு (மொழிபெயர்ப்பு: தம்ம சக்கரத்தின் பிரகடன நாள்) என்பது இந்தியாவில் நடைபெறும் ஒரு புத்தத் திருவிழா ஆகும். அக்டோபர் 14,1956 அன்று நாக்பூரில் உள்ள தீட்சா பூமியில் பி. ஆர். அம்பேத்கர் தனது 3,80,000 ஆதரவாளர்களுடன் புத்த மதத்தினை ஏற்றுக்கொண்டதைக் கொண்டாடும் நாள் இது.[1][2]


இந்திய அரசியலமைப்பின் சிற்பியான டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் இந்து மதத்தை துறந்து புத்த மதத்தை ஏற்றுக்கொண்ட நாள் தம்மசக்ரா அனுவர்தன் நாள் ஆகும். இது முதன்மையாக ஒவ்வொரு ஆண்டும் தீட்சா பூமியில் கொண்டாடப்படுகிறது.[3][4][5]

ஒவ்வொரு ஆண்டும் அசோக விஜயதசமி அன்று, இலட்சக் கணக்கான பௌத்தர்கள் தீட்சா பூமியில் கூடி வெகுஜன மதமாற்றத்தைக் கொண்டாடுகிறார்கள். நாக்பூரில் உள்ள தீக்சாபூமியில் தம்மசக்ரா அனுவர்தன் நாளும் அசோக விஜயதசமி அன்று ஆயிரக்கணக்கான மக்கள் புத்த மதத்திற்கு மாறுகிறார்கள். இங்கு 2018ஆம் ஆண்டில், சுமார் 65,000 பேரும் 2019ஆம் ஆண்டில், 67,543 பேரும் புத்த மதத்திற்கு மாறினர்.[6][7]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "53rd Dhammachakra Anuvartan day celebrated in Nagpur". Daily News and Analysis. 28 September 2009. Retrieved 12 August 2017.
  2. "धम्मचक्र प्रवर्तन दिन साधेपणाने".
  3. "करोनाचं सावट; 'या' दिवशी दीक्षाभूमीवर 'असं' चित्र कधीच दिसलं नाही".
  4. "Dhammachakra Pravartan Din with a difference".
  5. "63rd Dhamma Chakra Anuvartan Din celebrated in City with great fervor and spirit". 9 October 2019.
  6. "दीक्षाभूमीवर पार पडला 63 व्या धम्मचक्र प्रवर्तन दिनाचा मुख्य सोहळा". [தொடர்பிழந்த இணைப்பு]
  7. "अकोला जिल्ह्यातील धम्मचक्र प्रवर्तन दिन सोहळ्याचा इतिहास". 9 October 2019.