தம்பலகாமம் படுகொலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தம்பலகாமம் படுகொலைகள் (Tampalakamam massacre) 1998 பெப்ரவரி 3 ஆம் நாள் இலங்கையின் கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டத்திலுள்ள தம்பலகாமம் என்ற கிராமத்தில் இடம்பெற்றன. இலங்கைக் காவல்துறை, மற்றும் சிங்கள ஊர்காவல் படையினரின் சுற்றிவளைப்பின் போது எட்டு இலங்கைத் தமிழ்க் குடிமக்கள் கைது செய்யப்பட்டு அருகிலுள்ள காவல் நிலையத்திற்குக் கூட்டிச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 13, 17-வயது சிறுவர்களும் அடங்குவர்.[1] இப்படுகொலைகளில் சம்பந்தப்பட்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த காவல்துறையினர் ஒருவர் 2000 சனவரி 24 இல் இனந்தெரியாதவர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[2]

நிகழ்வு[தொகு]

சுற்றிவளைப்பில் சுமார் 20 பேர் ஈடுபட்டனர். காவல் நிலையத்துக்குக் கூட்டிச் செல்லப்பட்டவர்கள் அங்கு மிகக் கிட்டவாக வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தை அடுத்து கந்தளாய் காவல்துறையினர் வீடு வீடாகச் சென்று கொல்லப்பட்டவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டவர்கள் என ஒப்புதல் கையெழுத்திட கட்டாயப்படுத்தப்பட்டனர். அதே நாளில் 6 விடுதலைப் புலிகள் தம்பலகாமத்தில் கொல்லப்பட்டனர் என தேசியத் தொலைக்காட்சி சேவை அறிவித்தது.[1]

தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறையினர் கந்தளாய் காவல் நிலையத்திற்கு இடம் மாற்றப்பட்டனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Amnesty International Report". Amnesty International.org. 31-01-2004 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2006-01-06 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |archivedate= (உதவி)
  2. "Tampalakamam accused shot dead". Tamilnet.com. 2006-01-06 அன்று பார்க்கப்பட்டது.