தமுல்பூர் மாவட்டம்
தமுல்பூர் மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
![]() அசாம் மாநிலத்தில் தமூல்பூர் மாவட்டத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 26°38′N 91°35′E / 26.64°N 91.58°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
பிரதேசம் | ![]() |
நிறுவிய ஆண்டு | 23 சனவரி 2022 |
தலைமையிடம் | தமுல்பூர் |
அரசு | |
• மக்களவை தொகுதி | கோக்ராஜார் மக்களவைத் தொகுதி |
• சட்டமன்ற தொகுதி | தாமோல்பூர் சட்டமன்றத் தொகுதி |
பரப்பளவு | |
• மொத்தம் | 884 km2 (341 sq mi) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 3,89,150 |
• அடர்த்தி | 440/km2 (1,100/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
இணையதளம் | https://tamulpur.assam.gov.in/ |
தமுல்பூர் மாவட்டம் (Tamulpur district), வடகிழக்கு இந்தியாவில் உள்ள அசாம் மாநிலத்தின் போடோலாந்து பிரதேசத்தில் அமைந்துள்ளது. இதன் தலைமையிடம் தமுல்பூர் ஆகும். பாக்சா மாவட்டத்தின் சில தாலுகாக்களைக் கொண்டு 23 சனவரி 2022 அன்று தமுல்பூர் மாவட்டம் நிறுவப்பட்டது.[2]இதன் தலைமையிடம் தமுல்பூர் ஆகும்.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, தமூல்பூர் மாவட்டத்தின் மக்கள் தொகை 3,89,150 ஆகும். இதன் மக்கள் தொகையில் 1.45% பேர் மட்டுமே நகர்புறங்களில் வாழ்கின்றனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 970 பெண்கள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 42,246 (10.86%) மற்றும் 121,321 (31.17%) ஆக உள்ளனர்.[1]இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 83.36%, முஸ்லீம்கள் 12.97%, கிறித்தவர்கள் 3.22% மற்றும் பிறர் 0.45% ஆக உள்ளனர்.[3]இம்மாவட்டத்தில் அசாமிய மொழி 36.96%, போடோ மொழி 22.33%, வங்காள மொழி 5.18%, நேபாளி மொழி 4.67%, சந்தாளி மொழி 0.96% மற்றும் நாக்பூரி மொழி 0.93% மக்களால் பேசப்படுகிறது.[4]
இதனையும் காண்க
[தொகு]References
[தொகு]- ↑ 1.0 1.1 "District Census Handbook: Baksa" (PDF). censusindia.gov.in. Registrar General and Census Commissioner of India. 2011.
- ↑ "Assam Govt Forms Tamulpur As New District In State". www.sentinelassam.com (in ஆங்கிலம்). 2021-01-24. Retrieved 2022-01-24.
- ↑ "Table C-01 Population By Religion: Assam". census.gov.in. Registrar General and Census Commissioner of India. 2011.
- ↑ "Table C-16 Population By Mother Tongue: Assam". censusindia.gov.in. Registrar General and Census Commissioner of India. 2011.