தமீம் அன்சாரி பின் ஜைது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தமீம் அன்சாரி
தமீம் அன்சாரி பின் ஜைது
அடக்கத்தலம்
பிறந்த இடம்மதினா, அரேபியா
(தற்போது: சவுதி அரேபியா)
அடக்கத்தலம்கோவளம் கடற்கரை, தமிழ்நாடு,இந்தியா
Fatherஜைது இப்னு ஆசிம்[1]

தமீம் அன்சாரி பின் ஜைது ("Tamim bin Zaid") இஸ்லாமிய தீர்க்கதரிசி முகமது நபியின் தோழர்களில் ஒருவர் ஆவார். இவரது அடக்கத்தலம் இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னை அருகே கோவளம் கடற்கரைப் பகுதியில் உள்ளது. முகமது நபியின் தோழர்களில் இந்தியாவிற்கு வந்து இங்கேயே இறந்தவர்களில் இவரும் ஒருவர்.

சிறப்பு[தொகு]

இவர் முகமது நபியுடன் பத்ரு போரில் கலந்து கொண்ட 313 நபித்தோழர்களில் ஒருவராவார்.[2]

பயணம்[தொகு]

கலீபா உமர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் அரேபியாவிலிருந்து ஆசியக் கண்டத்திற்கு பயணம் செய்ய விரும்பினார் மகான் தமீம் அன்சாரி அதன்படி சிந்து பிரதேசத்திற்கு வந்து 18 ஆண்டுகள் தங்கி திருப்பணியாற்றினார்.[3]

தர்கா[தொகு]

புனித இறைநேசர் தமீம் அன்சாரியின் உடல் தங்கிய இடத்திலேயே தர்கா எழுந்தது. மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள கோவளம் தர்காவைக் கட்டுவதில் வாலாஜா நவாப்[யார்?] முக்கிய பங்காற்றினார்.[4]

தமீம் அன்சாரியின் அடக்கத்தலம் இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னை அருகே கோவளம் கடற்கரைப் பகுதியில் உள்ளது உள்ளது.இது தமீம் அன்சாரி தர்கா என்று அழைக்கப்படுகிறது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. أسد الغابة في معرفة الصحابة لابن الاثير
  2. "இறைநேசர்களின் நினைவிடங்கள்: குறைபோக்கிக் குணம் அருளும் கோவள நாயகர்", த இந்து, டிசம்பர் 10, 2005, http://tamil.thehindu.com/society/spirituality/இறைநேசர்களின்-நினைவிடங்கள்-குறைபோக்கிக்-குணம்-அருளும்-கோவள-நாயகர்/article7969622.ece 
  3. "இறைநேசர்களின் நினைவிடங்கள்: குறைபோக்கிக் குணம் அருளும் கோவள நாயகர்", த இந்து, டிசம்பர் 10, 2005, http://tamil.thehindu.com/society/spirituality/இறைநேசர்களின்-நினைவிடங்கள்-குறைபோக்கிக்-குணம்-அருளும்-கோவள-நாயகர்/article7969622.ece 
  4. "இறைநேசர்களின் நினைவிடங்கள்: குறைபோக்கிக் குணம் அருளும் கோவள நாயகர்", த இந்து, டிசம்பர் 10, 2005, http://tamil.thehindu.com/society/spirituality/இறைநேசர்களின்-நினைவிடங்கள்-குறைபோக்கிக்-குணம்-அருளும்-கோவள-நாயகர்/article7969622.ece 
  5. http://www.aulia-e-hind.com/dargah/Kovallam.htm