தமிழ் வழக்கு (டென்மார்க்)
தமிழ் வழக்கு (டானிசு: Tamilsagen) என்பது டென்மார்க்கில் தமிழ் குடும்பங்கள் மீள் இணைவது தொடர்பான ஒரு வழக்கு ஆகும். இந்த வழக்கு 1993 ஆம் ஆண்டு Poul Schlüter தலைமையிலான அரசு ஆட்சி இழக்கக் காரணமாக அமைந்தது.
வழக்கு
[தொகு]1987 ஆம் ஆண்டு தமிழ் குடும்ப இணைவுகளை குறைக்கும் வழிகளை அரசு ஆய்ந்தது. அதனைத் தொடர்ந்து நீதி அமைச்சர் Erik Ninn-Hanse தமிழ் குடும்பங்கள் மீள் இணைவதைத் தடுக்கும் வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொண்டார். இவை டானிசு சட்டத்துக்கு எதிரானவை என்று முடிவாகியது. இந்த வழக்கு ஊடகங்களில் பரந்த கவனிப்பைப் பெற்றது. அரசியல் நோக்கில் பெரும் எதிர்ப்பைச் சந்தித்தது. இதனைத் தொடர்ந்து Erik Ninn-Hansen 1989 ஆம் ஆண்டு பதவி விலகினார். நான்கு நீதி அமைச்சு ஊழியர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது, அமைச்சர் impeach செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அரசு ஆட்சி இழந்தது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Thi kendes for ret. Dokument. Rigsrettens dom over forhenværende justitsminister Erik Ninn- Hansen afsagt 22. juni 1995. Weekendavisen, 23.06.1995, 1._sektion, Side 3