தமிழ் மென்பொருள் உருவாக்கும் மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் மென்பொருள் உருவாக்கும் மையம் (Tamil Software Incubation Centre) தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழில் மென்பொருள்கள் உருவாக்கும் நோக்கத்துடன், தமிழ் இணையக் கல்விக்கழகத்தில், தமிழ் மென்பொருள் உருவாக்கும் மையத்திற்கு, தமிழ்நாடு அரசு ரூ. 45.00 லட்சம் நிதி வழங்கியுள்ளது. [1].

பயனர்கள் மற்றும் சேவைக் கட்டணம்[தொகு]

தமிழில் மென்பொருள் உருவாக்கும் எண்ணம் உடையவர்கள் மற்றும் கணினியில் இடவசதி தேவைப்படுகிறவர்கள். தனிநபர்களிடமிருந்து மாதம் ஒன்றுக்கு ரூ.4,000/-மும் மாணவர்களிடமிருந்து மாதம் ஒன்றுக்கு ரூ.1,000/-மும், சிறு மற்றும் குறு நிறுவனங்களிடமிருந்து ரூ 10,000/-மும் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

காலம்[தொகு]

திட்டத்திற்கேற்ப ஆறுமாதம் முதல் ஒருவருடம் வரை.

தமிழ் மென்பொருள் உருவாக்கும் மையங்கள்[தொகு]

  1. இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை
  2. அண்ணா பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பத்துறை, சென்னை
  3. கொங்கு பொறியியல் கல்லூரி, திருப்பெருந்துறை
  4. வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.tamilvu.org/coresite/html/cwincubation.htm

வெளி இணைப்புகள்[தொகு]

  • paper.dinamani.com/444501/Dinamani-Madurai/22-01-2015#page/5/2