தமிழ் முழக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ் முழக்கம் வெல்லும்  
துறை சமூக அரசியல்
மொழி தமிழ்
பொறுப்பாசிரியர்: சாகுல் அமீது
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகத்தார் சாகும் அமீது (இந்தியா)
வெளியீட்டு இடைவெளி: திங்கள் இருமுறை இதழ்

தமிழ் முழக்கம் என்னும் இதழ் தமிழ் நாட்டில் சென்னை நகரில் இருந்து வெளிவரும் திங்களிருமுறை இதழாகும். தமிழ் முழக்கம் பதிப்பகத்தின் உரிமையாளரான சாகுல் அமீது என்பவரால் 2010 திசம்பர் 1 ஆம் நாள் தொடங்கப்பட்டது. சீமான் தலைமையில் இயங்கும் நாம் தமிழர் என்னும் இயக்கத்தின் கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் பரப்புவதற்காக இவ்விதழ் வெளியிடப்படுகிறது.

ஆசிரியர் குழு[தொகு]

இவ்விதழில் சாகுல் அமீது ஆசிரியராகவும் பேராசிரியர் மருதமுத்து சிறப்பாசிரியராகவும் அன்புத்தென்னரசன் பொறுப்பாசிரியராகவும் ம. போர்க்கொடி, மணி செந்தில், சிபி சந்தர், மு. ப. செ. நாதன் ஆகியோர் உதவி ஆசிரியர்களாகவும் பணியாற்றுகின்றனர்.[1]

சான்றடைவு[தொகு]

  1. தமிழ் முழக்கம் வெல்லும், முழக்கம்:1 அதிர்வு:2, திசம்பர் 16-31/2010, பக்.17
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_முழக்கம்&oldid=3129679" இருந்து மீள்விக்கப்பட்டது