தமிழ் முரசு (இதழ்)
Appearance
தமிழ் முரசு 1950 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் ம.பொ.சிவஞானம் ஆவார். இது தமிழ் உணர்வோடு, தமிழரசுக் கழகச் செய்திக் குறிப்புகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.