தமிழ் மரபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் மரபு என இங்குக் குறிப்பிடப்படுவது தமிழ்மொழியின் மரபு. தொல்காப்பியம் மரபு என்னும் சொல்லாலும், என்ப, என்மனார், மொழிப முதலான சொற்களால் சுட்டியும் தொல்காப்பியர் தம் காலத்துக்கு முன்பு வழக்கத்தில் இருந்த தமிழ் மரபுகளைச் சுட்டிக் காட்டியுள்ளார். தொல்காப்பியர் தமிழை ஆராய்ந்து கூறிய மொழிச்செய்திகள் ஒருவகை. தொல்காப்பியர் காலத்து முன்பிருந்த தமிழ் இலக்கண நெறியாளர் வழியில் தொல்காப்பியர் காலத்தில் வழக்கத்தில் இருந்த மொழிச்செய்திகள் மற்றொரு வகை.

தொல்காப்பியர் காட்டும் இந்தச் செய்திகள் தமிழின் தொன்மையை விளக்குவன.


'மரபு' என்னும் சொல்லாட்சி[தொகு]

'நூன்மரபு' [1], 'மொழிமரபு' [2], 'தொகைமரபு' [3], 'மரபியல்' [4] எனத் தொல்காப்பியத்தில் இயல்களின் பெயர்கள் இடப்பட்டுள்ளன.

'என்ப'[தொகு]

தொல்காப்பியர் 'என்ப' என்னும் சொல்லைப் பயன்படுத்தி முன்னோர் வழங்கிவந்த தமிழ்நெறிகளைக் குறிப்பிட்டுள்ளார். அவை இங்குத் தொகுத்துத் தரப்படுகின்றன.

  • எழுத்துக்கள் [அ] முதல் [ன்] வரை 30 என்ப [5]
  • அ இ உ எ ஒ – 5ம் ஓரளபு இசைக்கும் குற்றெழுத்து என்ப [6]
  • ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ – 7ம் ஈரளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப [7] என்பன போன்றவை.

'என்மனார்'[தொகு]

தொல்காப்பியர் 'என்மனார்' என்னும் சொல்லைப் பயன்படுத்தி முன்னோர் வழங்கிவந்த தமிழ்நெறிகளைக் குறிப்பிட்டுள்ளார். அவை இங்குத் தொகுத்துத் தரப்படுகின்றன.

  • எழுத்துக்களை இரண்டு மாத்திரைகளுக்கு மேல் ஒலிக்கவேண்டியிருந்தால், அந்த உயிரெழுத்தின் அளபுடைய எழுத்துக்களைக் கூட்டி எழுதி ஒலிக்க வேண்டும் என்மனார் புலவர் [8]
  • எழுத்தொலி தன் மாத்திரையின் அளவினைக் கடந்து ஒலித்தல் இசையோடு கூடிய நரம்பின் மறையில் (யாழோசைப் பாடலில்) உண்டு என்மனார் புலவர் [9]
  • எழுத்தினைத் தனியே ஒலித்தாலும், சொல்லாக்கி ஒலித்தாலும் ஒலியின் அளபு மாறாது என்மனார் புலவர் [10] இப்படிப் பல.

'மொழிப'[தொகு]

தொல்காப்பியர் 'மொழிப' என்னும் சொல்லைப் பயன்படுத்தி முன்னோர் வழங்கிவந்த தமிழ்நெறிகளைக் குறிப்பிட்டுள்ளார். அவை இங்குத் தொகுத்துத் தரப்படுகின்றன.

  • ஔ வரை உள்ள 12 எழுத்துக்களை உயிர் என மொழிப [11]
  • ன வரை உள்ள 18 எழுத்துக்களை மெய் என மொழிப [12]
  • மெய் ஒலிப்பு நேரம் அரை மாத்திரை என மொழிப [13] என்பன போன்றவை.

அடிக்குறிப்பு[தொகு]

  1. இயல் 1
  2. இயல் 2
  3. இயல் 5
  4. இயல் 27
  5. தொல்காப்பியம் 1-1
  6. தொல்காப்பியம் 1-3
  7. தொல்காப்பியம் 1-4
  8. தொல்காப்பியம் 1-6
  9. தொல்காப்பியம் 1-33
  10. தொல்காப்பியம் 1-53
  11. தொல்காப்பியம் 1-8
  12. தொல்காப்பியம் 1-9
  13. தொல்காப்பியம் 1-11
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_மரபு&oldid=3320647" இலிருந்து மீள்விக்கப்பட்டது