தமிழ் பஹாய் இணையத்தளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ் பஹாய்
Prsamy.jpg
உரலிprsamy.org/
தளத்தின் வகைசமயம்
உரிமையாளர்இராமசாமி
உருவாக்கியவர்இராமசாமி
வெளியீடு2008
தற்போதைய நிலைசெயற்படுகிறது


பஹாய் சமயம் பற்றிய ஒரு வலைத்தளம் தமிழ் பஹாய் வலைத்தளம் ஆகும். பஹாவுல்லாவின் போதனைகளுக்கு ஏற்ப, ஒரே அடிப்படை நோக்கத்தைக் கொண்டிருந்த, வெவ்வேறு சமயங்களின் கூட்டு வரலாற்றின் படிப்படியான வளர்ச்சியில் பஹாய் சமயம் அடுத்த கட்டமாகும். ஆபிரகாம், கிருஷ்ணர், மோசே, புத்தர், இயேசு, முகம்மது நபி ஆகியோரை உள்ளடக்கிய அவதாரங்களின் வழியில் தாமும் ஒருவர் என பஹாவுல்லா தம்மைக் குறிப்பிட்டுக்கொண்டார். வருங்காலத்தில் வேறுபட்ட மக்கள் கூட்டங்கள் ஒரே அமைதியான ஒன்றுசேர்க்கப்பட்ட உலகளாவிய சமூகமாக உருபெறும் எனும் உலக புனித நூல்கள் அனைத்தின் முன்னறிவிப்பை பஹாய் சமயம் நிறைவுச் செய்கின்றது என்பது பஹாய்களின் நம்பிக்கையாகும்.[1] இச்சமயம் மற்றும் சமயத்தவர் குறித்த செய்திகளையும், சமயக் கருத்து விளக்கங்களையும் தமிழில் “தமிழ் பஹாய்” இணைய தளம் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Esslemont, J.E. (1980). Bahá'u'lláh and the New Era (5th ed. ). Wilmette, Illinois, U.S.: Bahá'í Publishing Trust. ISBN 0-87743-160-4. http://reference.bahai.org/en/t/je/BNE/. 

வெளி இணைப்பு[தொகு]