தமிழ் நேசன் (மலேசிய இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்நேசன்.png

தமிழ் நேசன் (Tamil Nesan) என்பது மலேசியாவில் இருந்து வெளிவந்த ஒரு தமிழ் செய்திப் பத்திரிகை ஆகும். 94 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இந்த இதழ் பொருளாதாரப் பற்றாக்குறையால் 2019 பிப்ரவரி 1 ஆம் நாள் முதல் தனது வெளியீட்டை நிறுத்திக் கொண்டது.[1]

முதல் பதிப்பு[தொகு]

மலேசியாவின் பழமையான செய்தித்தாளான தமிழ்நேசன்[2] 1924 ஆம் ஆண்டு முதல் வெளிவந்தது. தமிழ்நேசனின் முதல் இதழ் 1924 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் நாள் வெளியிடப்பட்டது.[3][4]

செய்திகள்[தொகு]

தமிழ்நேசன் செய்தித்தாள் மலேசியாவில் உள்ள இந்திய வம்சாவளியைச் சார்ந்தவர்களால் வெளியிடப்பட்டது. மலேசியாவில் உள்ள இந்தியர்கள் குறிப்பாக தமிழர்களை இலக்காகக் கொண்டு இது வெளியிடப்பட்டது. தமிழ்நேசன் செய்தித்தாள் பல்வேறு வகையான செய்திகளை வாசகர்களுக்காக வெளியிட்டது. அரசியல், மதம், நாடு, உலகம், கல்வி மற்றும் தமிழ் திரைப்படங்கள் பற்றிய செய்திகள் இவற்றில் உள்ளடங்கும். மலேசியாவில் தோராயமாக தினமும் 20000 பிரதிகளை வெளியிட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tamil Nesan to cease operations on Feb 1". டெய்லி எக்ஸ்பிரஸ். http://dailyexpress.com.my/news.cfm?NewsID=130992. பார்த்த நாள்: 1 February 2019. 
  2. Tamilavel (2019-01-29). "மலேசியாவின் தமிழ் நேசன் நாளிதழ் மூடப்படுகிறது என அதிர்ச்சித் தகவல்". Tamil Murasu. 2022-03-16 அன்று பார்க்கப்பட்டது.
  3. "About Us". Tamil Nesan. 2011-01-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25-03-2011 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி); Check date values in: |accessdate= (உதவி)
  4. "Tamil Nesan 'the oldest Tamil daily' - Nation - The Star Online". 12-08-2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)